அஜித்னா யாரு ? துரைமுருகன் கேட்ட கேள்வி. அஜித் ரசிகர்கள் பகிரும் பழைய வீடியோக்கள்.

0
1719
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் அஜித். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவரை எல்லோருமே செல்லமாக தல என்று தான் அழைப்பார்கள். கடைசியாக அஜித் நடிப்பில் வெளிவந்த படம் துணிவு. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

இதனை அடுத்து தற்போது அஜித் அவர்கள் விடாமுயற்சி என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, அஜித் பெயரை சொன்னாலே போதும் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து கரகோஷம் செய்து விடுவார்கள். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் திமுக அமைச்சர் துரைமுருகன் அஜித்தை குறித்து பேசிய வீடியோ தான் தற்போது சோசியல் மீடியா வைரலாகி வருகிறது.

- Advertisement -

அஜித் குறித்து அமைச்சர் துரைமுருகன் சொன்னது:

அதாவது, திமுகவின் அமைச்சர் துரைமுருகன் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்தார். அப்போது தொகுப்பாளர் நடிகர் அஜித் பற்றி கேள்வி கேட்டிருந்தார். அதற்கு துரைமுருகன், அஜித்னா யாரு? என்று கேட்டிருக்கிறார். இதை பார்த்த அஜித் ரசிகர்கள் கொந்தளித்து போய் துரைமுருகனை வறுத்தெடுத்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் துரைமுருகனை விமர்சித்து பாடல் எலாம் எடிட் செய்து அஜீத் இருக்கிறார்கள்.

கருணாநிதி குறித்து அஜித் சொன்னது:

அந்த வகையில், 2010 ஆம் ஆண்டு பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சியில் உங்கள் முகத்திரை வைத்தவர் டா என்று ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்கள். அதில், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது திரை உலகம் சார்பில் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடந்தது. அதில் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்று கலைஞரை குறித்து பேசி இருந்தார்கள். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அஜித், இது போன்ற அரசியல் விழாக்களில் எங்களை கட்டாயப்படுத்தி மிரட்டி வரவழைக்கின்றனர்.

-விளம்பரம்-

வைரலாகும் வீடியோ:

எங்களுக்கு அரசியல் வேண்டாம். ஐயா, எங்களை நடிக்க விடுங்க. அரசியலையும், சினமாவையும் ஒண்ணாக்க பாக்கிறாங்க. இதற்கு ஒரு நல்ல முடிவை எடுங்க ஐயா என்று மேடையில் தைரியமாக பேசி கலைஞரிடம் கோரிக்கை வைத்தார். அவரின் பேச்சை கேட்டு அரங்கில் இருந்த நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். மேலும், அஜித்தின் இந்த ஆதங்கமான பேச்சிக்கு பல்வேறு தரப்பில் கண்டனங்கள் எழுந்தது.

துரைமுருகன் பேச காரணம்:

தற்போது அந்த வீடியோவை தான் அஜித் ரசிகர்கள் பதிவிட்டு மீம்ஸ்களை தெறிக்க விட்டு வருகிறார்கள். அதோடு துரைமுருகன் திமுகவின் பொது செயலாளர் ஆக இருந்த போது அஜித் கருணாநிதியை இப்படி பேசியதினால் தான் இவர் அஜித்தின் மீது இப்படி வெறுப்பை காட்டி பேசியிருக்கிறார் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

Advertisement