போலீசிடமே வாக்கு வாதம், சிங்கம் சூர்யா போல பாஜக நிர்வாகிகளை தரதரவென இழுத்து சென்ற எஸ்.பி -வீடியோ இதோ

0
585
abinav
- Advertisement -

ரியல் சிங்கமாய் மாறி சேலத்தில் பாஜக நிர்வாகிகளை வெளுத்து வாங்கிய போலீஸ் எஸ் பி யின் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2010ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த சிங்கம் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக மிரட்டி இருப்பார். அந்த வகையில் தற்போது ரியல் சிங்கமாக சேலத்தில் போலீஸ் ஒருவர் செய்த செயல் சோசியல் மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள ஊர் ஜலகண்டாபுரம்.

-விளம்பரம்-

இங்கு உள்ள மார்க்கெட்டில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த கொடிக்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் ஜலகண்டபுரம் மார்க்கெட்டில் கடந்த மாதம் புதிய கொடி கம்பம் நடப்பட்டது. மேலும், இந்த கொடிக்கம்பம் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அனுமதி பெறாமல் கொடிக்கம்பம் நடப்பட்டதாக கூறி ஜலகண்டாபுரம் பேரூராட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன் பாஜகவின் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது.

- Advertisement -

பாஜகவினர் உறுப்பினர்கள் போராட்டம்:

இந்த நிலையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்டது கண்டித்து ஏராளமான பாஜகவினர் உறுப்பினர்கள் ஜலகண்டாபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் என்று கூடினர். பின்பு அவர்கள் கொடிக்கம்பத்தை நீக்கியதற்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சுதீர் முருகன் தலைமையில் இந்த போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட பாஜகவினர் கலந்து கொண்டனர்.

கொடிக்கம்பத்தை போலீஸ் அகற்றுதல்:

மேலும், போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வழக்கம் போல் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி இருக்கிறார்கள். அப்போது அதே இடத்தில் பாஜகவினர் மீண்டும் கட்சி கொடியினை நட்டார்கள். இது அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்து போலீசார் வந்தார்கள். பின் பாஜகவினர் அமைத்த கொடிக்கம்பத்தை அகற்றினார்கள்.

-விளம்பரம்-

போலீஸ்-பாஜகவினர் உறுப்பினர்கள் சண்டை:

இதனால் போலீசாருக்கும், பாஜகவினர் உறுப்பினருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் மோதலாக மாறியது. இரு தரப்பும் இடையே சண்டை முற்றியது. மேலும், அந்த பகுதியே கொஞ்சம் பதட்டமாக மாறியது. இந்த நிலையில் மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்ரீ அபிநவ் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை மாவட்ட போலீஸ் எஸ்பி இழுத்துச் சென்று அதிரடியாக கைது செய்தார். இதற்கு பாஜகவினரும் அப்பகுதியை சேர்ந்த அதிமுகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அனைவரையும் கைது செய்த போலீஸ்:

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 100 க்கும் மேற்பட்ட பாஜக உறுப்பினர்களை போலீசார் கைது செய்தனர். பின் மாவட்ட நிர்வாகிகளை போலீஸ் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்யும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. இதை அடுத்து எஸ்பியின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தும், சிலர் ஆதரவு தெரிவித்தும் வருகின்றனர். மேலும், ஒரு சிலர் சிங்கம் சூர்யா என்று அவரை புகழ்ந்து வருகின்றனர்.

Advertisement