வருச கடைசில உன்னையும் இப்படி ஒரு கோலத்துல பாக்கற நிலைமையாகிடுச்சே’ – வித்யு லேகா பதிவிட்ட புகைப்படத்திற்கு குவியும் கமன்ட்.

0
1518
vidhyu
- Advertisement -

தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர் நடிகைகள் வாரிசுகள் தற்போது நடிகர்களாகவும், நடிகைகளாகவும் ஜொலித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை வித்யு லேகாவும் ஒருவர். இவர் பிரபல நடிகர் மோகன் ராமனின் மகளாவார். இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “நீதானே என் பொன் வசந்தம் “படத்தில் சமந்தாவுக்கு தோழியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வித்யூ லேகா. இந்த படத்தை தொடர்ந்து தீயா வேலை செய்யணும் குமாரு, ஜில்லா, வீரம், காக்கிச்சட்டை, மாஸ் என்று பல்வேறு தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

இவர் பப்ளியான லுக்கில் தனது காமெடியால் பலரையும் வெகுவாக ஈர்த்தது. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பஞ்சு மிட்டாய் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் இவரை தமிழில் எந்த படத்திலும் காண முடிவதில்லை. இருப்பினும் அம்மணி தெலுங்கு சினிமாவில் படு பிசியாக நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு மட்டும் தெலுங்கில் 6 படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமா உலகில் நுழையும் போது நடிகை வித்யு லேகா பப்ளியாக தான் இருந்தார்.

- Advertisement -

பின் தனது உடல் எடையை குறைத்து பிட்டான உடலில் வலம் வரவேண்டும் என ஆசைப்பட்ட வித்யுலேகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் சென்ற ஆண்டு எடுத்த புகைப்படத்தையும் தற்போது எடுத்த புகைப்படம் ஒன்றையும் ஒப்பிட்டு புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் சென்ற ஆண்டு 86.5 கிலோவில் இருந்து இந்த ஆண்டு 65.3 கிலோவிற்கு மாறியுள்ளாராம்.

கடந்த 26ம் தேதி தான் இவருக்கு எளிமையாக நிச்சயதார்த்தம் முடிந்தது. இந்த விழாவில் நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டார்கள்.இப்படி ஒரு நிலையில் நடிகை வித்யூ லேகா கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். இதோ அந்த புகைப்படம். இதை பார்த்த ரசிகர் ஒருவர் ‘ வருச கடைசில உன்னையும் இப்படி ஒரு கோலத்துல பாக்கற நிலைமையாகிடுச்சே’ என்று கமன்ட் செய்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement