தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தற்போது இயக்கியுள்ள படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலம் தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். மேலும், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படம் உருவாகிறது.
அதோடு இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலர் வெளியானது அடுத்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். அதில் வெற்றிமாறன் நல்ல இயக்குனர் என்றும் 1500 படங்களுக்கு இசையமைத்த பின்னர் இதனை தான் கூறுவதாகவும் இளையராஜா தெரிவித்தார்.
பவானி ஸ்ரீ பேட்டி :
இந்த நிலையில் விடுதலை படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்துள்ள நடிகை பவானி ஸ்ரீ சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். அவர் கூறுகையில் “கிராமத்தில் காவலராக பணியாற்றிவரும் கான்ஸ்டபிளுடன் பிணைப்பை ஏற்படுத்திக்கொள்ளும் ஒரு பழங்குடியின பெண் கதாபாத்திரத்தில் நான் நடித்திருக்கிறேன். இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுடன் பணியாற்றுவது எல்லா நடிகர்களுக்கு ஒரு கனவாக இருக்கும், ஆனால் எனக்கு நான் நடித்த இரண்டாவது படத்திலேயே வாய்ப்பு கிடைத்து விட்டது மிகவும் மகிழ்ச்சியான ஒரு விஷயம்.
மறக்க முடியாத அனுபவம் :
இயக்குனர் வெற்றிமாறன் ஒரு சிறந்த இயக்குனர், தனித்தன்மையான கதைகளை உருவாக்குவதில் சிறந்தவர். அதற்கும் மேலாக அவர் ஒரு நல்ல மனிதர். மரங்கள் நிறைந்த காடுகளில் படப்பிடிப்பு நடக்கும் போது அங்குள்ள சிறிய பூச்சிகளுக்கு கூட எந்த தீங்கும் நடக்க கூடாது என்று மிகவும் கவனமான பணியாற்றினார். அது ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. நடிகர் சூரி அவர்கள் சிறப்பாக நடித்திருக்கிறார் கண்டிப்பாக அவருக்கு பாராட்டுக்கள் குவியும். அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பு நடந்தது எனக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை கொடுத்து என்றார்.
ரசிகர்கள் அதிகரிப்பு :
மேலும் பேசுகையில் ரசிகர்கள் அதிகரித்து விட்டனரா? என்ற கேள்விக்கும் பதிலளிக்கும் வகையில் அவர் கூறியதாவது “எனக்கு அதிகமாக ரசிகர்கள் வந்து விட்டனரா என்று அதன் உண்மை தன்மை தெரியாது. ஆனால் நான் இரண்டு படங்களில் மட்டுமே நடித்திருக்கிறேன். எனவே இந்த பாராட்டுக்கள் கிடைத்தற்கு எனக்கு மகிழ்ச்சி தான். தன்னுடைய திறமையினால் அழகான பாடல்களை இயற்றியிருக்கும் இசைஞானி இளயராஜா அவர்களுக்கு எல்லா பாராட்டுகளும் சேரும்.
இளையராஜா படலை மறுக்க காரணம் :
என்னுடைய குடும்பத்திலேயே நான் மட்டும் தான் மிகவும் மாறுபட்ட ஒருவர். என்னை இசை கற்றுக்கொள்ள சொல்லு பல முறை என்னுடைய குடும்பத்தினர் வற்புறுத்தினார்கள் ஆனால் நான் சரியாக கற்றுக்கொள்ளவில்லை. இசைஞானி இளையராஜா கூட ஒரு பாடலை பாடச்சொல்லி என்னிடம் கேட்டபோது நான் மறுத்து விட்டேன் என்று கூறினார் நடிகை பவானி ஸ்ரீ. மேலும் விடுதலை படத்தை பாதி தான் பார்த்ததாகவும் ஆனால் முழு படம் பார்த்தவர்கள் படம் நன்றாக வந்திருப்பதாக கூறினார்கள். கண்டிப்பாக ரசிகர்கள் “விடுதலை” படத்தை கொண்டாடுவார்கள் என்று கூறினார்.