தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.படத்தில் மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இதனால் தங்கள் இடமும் பறிபோய் விடும் என்று பயப்படுகிறார்.
இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார். வழக்கம்போல் மக்கள் போராட ஆரம்பித்தால் அவர்களை அடக்கி ஒடுக்க வன்முறையை போலீஸ் கையில் எடுக்கிறது. இரக்கமில்லாமல் போலீஸ் மக்களிடம் நடந்து கொள்கிறார்கள். இந்த இரக்கமற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இரக்கமுள்ள கான்ஸ்டபில் ஆக நடிகர் சூரி இருக்கிறார். இவர் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.
முன்னணி இயக்குனர் :
இப்படி வித்தியாசமான திரைக்கதையின் மூலம் தான் ஒரு முன்னணி இயக்குனர் என்பதனை மீண்டும் ஒரு முறை விடுதலை பாகம் 1 படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் இயக்குனர் வெற்றிமாறன். அதிலும் என்னதான் பெரிய நடிகர்களாக இருந்தாலும் ஒரு காமெடி நடிகரை வைத்து கமர்சியல் படம் அதிலும் பல கோடிகள் செலவழித்து படம் எடுப்பது என்பது மிகப்பெரிய விஷயம். ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் அந்த விஷியத்தை நிஜத்தில் நடத்தி காட்டி, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
போட்டியாக வந்த பத்து தல :
ஆனால் விடுதலை படம் என்னதான் கமர்ஷியல் படம் என்று சொல்லிக்கொண்டாலும் பெரிதாக வசூல் செய்யவில்லை என்பது உண்மையே. விடுதலை படத்திற்கு முன்னர் வெளியான சிம்புவின் “பத்து தல” முதல் நாள் வசூலில் தமிழ் நாட்டில் மட்டுமே 8 கோடி வசூல் செய்ததாகவும், உலகம் முழுவதும் மொத்தமான 12 கோடி வசூல் செய்துள்ளதாக நேற்று “பத்து தல” படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகார பூர்வமாக வெளியிட்டது.
விடுதலை பாகம் 1 வசூல் :
இருந்த போதிலும் “பத்து தல” படம் வெளியாகி அடுத்த நாள் விடுதலை பக்கம் 1 வெளியானது. ஆனால் சிம்புவின் படம் அளவிற்கு அதிக வசூல் கிடைக்கவில்லை விடுதலை படத்திற்கு கிடைக்கவில்லை. ஏனென்றால் விடுதலை படம் சென்சார் போர்டில் ஏ சான்றிதழ் மட்டுமே வாங்கியுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் வரும் ரசிகர்கள் பெரிதாக வரவில்லை. இருந்த போதிலும் இளம் வயது ரசிகர்கள் கூட்டம் வந்தது.
Dir #VetriMaaran ‘s #ViduthalaiPart1 storms the TN Box office with an incredible opening of ₹ 8 Crs on Day 1.. 🔥 @sooriofficial @VijaySethuOffl @rsinfotainment pic.twitter.com/sleGvb7h3p
— Ramesh Bala (@rameshlaus) April 1, 2023
இந்நிலையில் முதல் நாள் முடிவில் விடுதலை படம் தமிழ் நாட்டில் 6 கோடியும் உலகம் முழுவதும் சேர்த்து 8 கோடியும் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இருந்தபோதிலும் இன்று மற்றும் நாளை விடுமுறை நாட்கள் என்பதினால் வசூல் இன்னமும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.