இரவு பார்ட்டிக்கு செல்ல மறுத்ததால் நின்று போன அஜித் பட நடிகையின் ஷூட்டிங் ? பாலிவுட்டில் சர்ச்சை.

0
675
Vidhya
- Advertisement -

இரவு பார்ட்டிக்கு செல்ல மறுத்ததால் வித்யா பாலனின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதாக வெளியான செய்தியால் பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சை கிளம்பி இருக்கிறது.கடந்த 2003-ஆம் ஆண்டு பெங்காலி மொழியில் வெளி வந்த திரைப்படம் ‘பலோ தேகோ’. இந்த படத்தினை இயக்குநர் கெளதம் ஹல்தர் இயக்கியிருந்தார். இதில் ஹீரோயினாக வித்யா பாலன் நடித்திருந்தார். இது தான் வித்யா பாலன் அறிமுகமான முதல் திரைப்படம். இதனைத் தொடர்ந்து பாலிவுட் திரையுலகில் நுழைந்த நடிகை வித்யா பாலன், ‘பரிநீதா, லகே ரகோ முன்னா பாய், குரு, பா’ என அடுத்தடுத்து பல படங்களில் நடித்தார். அதிலும் இவர் நடித்த ‘டர்ட்டி பிக்சர்’ திரைப்படம் மாபெரும் சர்ச்சையை கிளப்பியதோடு வெற்றியும் பெற்றது/.

-விளம்பரம்-

அதன் பிறகு மலையாளத்தில் ‘உருமி’ என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார் நடிகை வித்யா பாலன். இந்த படத்தினை பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கியிருந்தார். ஹிந்தி திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை வித்யா பாலன், தமிழ் திரையுலகிலும் கால் பதிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்.தமிழில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இது தான் வித்யா பாலன் தமிழ் திரையுலகில் என்ட்ரியான முதல் திரைப்படம், தற்போது ‘ஷேர்னி’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

- Advertisement -

மத்திய பிரதேச வனப்பகுதியில் சில காட்சிகளின் படப்பிடிப்புக்காக அவர் கடந்த சில வாரங்களாக அந்த மாநிலத்தில் தங்கி படப்பிடிப்பில் ஈடுப்பட்டுள்ளார். மத்திய பிரதேச வனத்துறை அமைச்சர் விஜய் ஷா இரவு உணவிற்கு வித்யா பாலனை அழைத்ததாகவும், அதை அவர் நிராகரித்ததாகவும் கூறப்படுகிறது. இது நடந்து ஒரு நாள் கழித்து, திரைப்படத்தின் தயாரிப்புக் குழுவின் வாகனங்கள் படப்பிடிப்புக்காக காட்டுக்குள் நுழைவது நிறுத்தப்பட்டதாகக்செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இப்படி ஒரு நிலையில் சர்வேதச பத்திரிகை ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ள அமைச்சர் விஜய் ஷா, படப்பிடிப்புக்கு அனுமதி பெற்று சிலர் என்னை அழைத்ததால் நான் பாலாகாட்டிற்கு சென்றேன். அவர்கள் என்னை மதிய உணவு அல்லது இரவு உணவிற்கு அழைத்தனர். ஆனால், என்னால் இப்போது உணவில் கலந்துகொள்ள முடியாது என்றும் மகாராஷ்டிராவிற்கு செல்லும்போது அவர்களை சந்திப்பதாகவும் நான் தான் அவர்களிடம் கூறினேன். ஆகையால், மதிய உணவு/ இரவு உணவுதான் ரத்து செய்யப்பட்டது, படப்பிடிப்பு ரத்து செய்யப்படவில்லை என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement