தமிழில் நீதானே என் பொன் வசந்தம், வீரம், வி எஸ் ஓ பி, ஜில்லா, மாஸ் போன்ற பல காமெடி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை வித்யூ ராமன். இவர், பிரபல குணசித்திர நடிகர் மோகன்ராமின் மகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார். சினிமாவில் நடிக்க ஆரம்பமான நாள் முதலே வித்யூ ராமன் படு குண்டாக தான் இருந்தார். இதனால் அவர் பல்வேறு கிண்டலுக்கும் உள்ளானார். இந்த நிலையில் வித்யூ ராமன் தனது உடல் எடையை குறைக்க கடுமையான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார்.
இதையும் பாருங்க : லாஸ்லியாவை பார்த்தாலே எரிச்சலா இருக்கு.! ட்வீட் செய்த பிக் பாஸ் பிரபலத்தின் கணவர்.!
அந்த விடீயோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் வித்யூ ராமன். மேலும், கடின உடற் பயிற்சி மூலம் தனது உடல் எடையை குறித்துள்ள வித்யூ ராமன் குண்டாக இருந்த போது அணிந்திருந்த அதே உடை தற்போது லூஸாக மாறியுள்ள புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
வித்யூ ராமனின் இந்த முயற்சியை கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உடல் எடை ஒரு தடை இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் கவர்ச்சியான ஆடையில் போட்டோ ஷூட் நடத்தி புகைபடங்களை வெளிட்டார். அதற்கு பல்வேறு பாராட்டுக்களும் விமர்சனங்களும் குவிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே போல உடல் எடையை குறைத்ததால் அடிக்கடி தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதயும் வாடிக்கையாக வைத்து வருகிறார் நடிகை வித்யூ ராமன். சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றன.