விஜய் சார் இப்படி தான் டைலாக்கை மனப்பாடம் செய்வார். விஜய் 64 பிரபலம் சொன்ன சீக்ரெட்.

0
12459
Vijay
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராகவும், வசூல் மன்னனாகவும் திகழ்பவர் நடிகர் விஜய். மேலும், அட்லி இயக்கத்தில் தளபதி விஜய் அவர்கள் நடிப்பில் தீபாவளியை முன்னிட்டு வெளிவந்த பிகில் படம் தியேட்டர்களில் திருவிழா போன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு பட்டையை கிளப்பியது என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தில் நயன்தாரா, விவேக், கதிர், ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, இந்துஜா, இந்திரஜா, வர்ஷா பொல்லம்மா, அம்ரிதா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் ஏஜிஎஸ் என்டெர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. ஏ.ஆர்.ரகுமான் அவர்களின் இசையில் பாடல்கள் எல்லாம் தூள் கிளப்பியது. உலகம் முழுவதும் இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. தற்போது கூட இந்த படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டு தான் உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நம்ம தளபதி விஜய் அவர்கள் “தளபதி 64” என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்னமும் இந்த படத்திற்கு பெயரிடவில்லை. இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்க உள்ளார்கள். மேலும், அனிரூத் அவர்கள் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.

-விளம்பரம்-
Dancer Vicky

- Advertisement -

மேலும், விஜய் அவர்கள் நடிக்கும் தளபதி 64 படத்தில் நடனம் ஆடுபவர் ஆக வந்தவர் இப்போது அந்த படத்திலேயே நடிகராகி இருக்கிறார். அவர் வேற யாரும் இல்ல டான்ஸர் விக்கி. இது குறித்து ஒரு பேட்டியில் அவரிடம் கேட்டபோது அவர் கூறியது, நான் விஜய் சாரின் “தளபதி 64” படத்தில் நடனமாட தான் வந்தேன். அப்போது என்னுடன் இருந்தவர்களில் ஒரு நடனம் ஆடுபவரை படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் லோகேஷ் அவர்கள் முடிவு செய்துள்ளதாக நான் கேள்விப்பட்டேன். ஆனால், நான் எதிர்பார்க்கவே இல்லை அது நானாக இருப்பேன். மேலும், அவர் என்னை தான் தேர்வு செய்துள்ளார். திடீரென்று அவர் என்னிடம் வந்து நீங்கள் படத்தில் நடிக்கிறீர்களா!! என்று கேட்டார். எனக்கு ஒரு நிமிடம் நான் உறைந்து போய் நின்றேன். அதுமட்டுமில்லாமல் விஜய் படத்தில் நடிக்க கேட்டால் வேணாம்னு யாராவது சொல்லுவாங்களா!! நான் உடனே ஓகே என்று சொல்லிவிட்டேன்.

நான் விஜய் சாரோட பல படங்களின் பாடலுக்கு ஆடி இருக்கிறேன். விஜய் அவர்கள் படப்பிடிப்பில் அவருடைய டயலாக் எல்லாம் அப்படியே பல்லை கடித்துக் கொண்டு சொல்லுவார். ஆனால், அவர் டயலாக் மனப்பாடம் பண்றார் என்பதே நமக்கு தெரியாது. எவ்வளவு பெரியதாக இருந்தாலும் இப்படித் தான் ப்ராக்டிஸ் பண்ணுவாரு. மேலும், ஒரே டேக்கில் ஓகே பண்ணிடுவாரு. மேலும்,டான்ஸ்ல எப்படி அவர் கில்லியோ அதே மாதிரி தான் ஆக்டிங்கிலும் கில்லி என்று கூறினார். மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி அவர்கள் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

-விளம்பரம்-
dancer vicky

மேலும், இந்த படத்தில் சாந்தனு பாக்யராஜ், ஆண்டனி வர்கீஸ், ஆண்ட்ரியா, கெளரி கிஷண், ப்ரிகிடா, ஸ்ரீமன், சஞ்சீவ், ஸ்ரீநாத், ப்ரேம், சேத்தன், அழகம் பெருமாள், மேத்யூ வர்கீஸ், சுனில் ரெட்டி உட்பட ஒட்டு மொத்த நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள் என்று சொல்லலாம். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு டெல்லியில் முடிவடைந்து தற்போது சென்னையில் தொடங்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், இந்த படம் 2020 ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் திரையரங்குகளில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்தார்கள். தளபதி விஜய் படம் எல்லாமே சாதனை படங்களாகத் தான் அமைந்து வருகிறது.

Advertisement