எனக்காக அவர் பேசியதால் தான் இன்று வரை அவருக்கு இந்த பிரச்சினை – பகல் நிலவு விக்னேஷ் உருக்கம்.

0
492
vignesh
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எத்தனையோ சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று விடுகிறது. அதிலும் ராஜா ராணி, மௌன ராகம், சின்னத்தம்பி, கடைக்குட்டி சிங்கம் என்று சினிமா டைட்டிலை ஒன்று விடாமல் பெயராக கொண்டு வந்த தொடர்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு நிறைவடைந்த பகல் நிலவு சீரியல் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. 2016 ஆம் ஆண்டு துவங்கிய இந்த தொடர் 2019 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக ஓடியது.

-விளம்பரம்-

700-வது எபிசோடை நெருங்கிக் கொண்டிருந்த வேலையில் ,இந்த தொடரில் இருந்து அன்வர் மற்றும் சமீரா ஜோடி வெளியேறினார். அன்வர் கார்த்திக் – சௌந்தர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் குறைந்ததாகவும், அன்வர் கதையில் குறுக்கிட்டு டாமினேட் செய்ததே அதற்குக் காரணம் என்றும் பேசப்பட்டது.அன்வரும் சமீராவும். `குரூப் பாலிடிக்ஸ்’ என அன்வர் தெரிவித்திருந்த வார்த்தைக்கு, சௌந்தர்யா உள்ளிட்ட சக நடிகர், நடிகைகள் உடனே கண்டனமும் தெரிவித்திருந்தார்கள்.

- Advertisement -

இதனை தொடர்ந்து இந்த தொடரில் இருந்து விக்னேஷ் – சௌந்தர்யா ஜோடியும் சீரியலில் இருந்து விலகினார்கள். அவர்களை தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் அசீம் மற்றும் ஷிவானி நடித்து வந்தார்கள். ஆனால், கார்த்தி – சௌந்தர்யா ஜோடிகளை ரசிகர்கள் மிகவும் மிஸ் செய்து வந்தனர். இந்த நிலையில் இந்த சீரியலில் இருந்து விலகிய உண்மையான காரணத்தை கூறி இருந்தார் விக்னேஷ் கார்த்தி.

‘நானாக விலகவில்லை. சில சதியால் நான் விளக்கப்பட்டேன். அதற்கு காரணமானவர்கள் மரியாதைக்கு கூட பதில் சொல்லவில்லை, அவர்களுக்கு தைரியமும் இல்லை’ என்று கூறி இருந்தார். பகல் நிலவு சீரியலுக்கு பின்னர் விக்னேஷ் கார்த்திக் எந்த தொடரிலில் நடிக்கவில்லை. இறுதியாக ஐஸ்வர்யா ராஜேஷை வைத்து ‘திட்டம் இரண்டு’ படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

-விளம்பரம்-

ஆனால், சௌந்தர்யா பகல் நிலவு தொடருக்கு பின் வேறு எந்த தொடரிலும் நடிக்கவில்லை. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது முகநூல் பக்கத்தில் சௌந்தர்யா குறித்து பதிவிட்டு இருந்த விக்னேஷ் கார்த்திக் ‘என் வாழ்கையில் ஒருவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றால் அது சௌந்தர்யாவிடம் தான் கேட்க வேண்டும். பகல் நிலவு தொடரில் அவர் என்னுடன் ஜோடியாக நடித்தார், அதே சேனலில் பாடும் ரியாலிட்டி ஷோவுக்குப் பிறகு சின்னத்திரைக்கு அடியெடுத்து வைத்த ஒரே பெண், 2017ல் டெலி விருதுகளில் என்ன நடந்தது என்பதற்காக அவர் பொது வெளியில் எனக்கு ஆதரவளித்தார்,

அவர் அப்படி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால், தன்னுடன் நடித்த நடிகருக்கு நடந்த ஏமாற்றத்தை மக்களுக்கு சொல்ல வேண்டும் என்பதற்காக அவர் எனக்காக நின்றார். அதனால் அவர் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டார் (வழக்கம் போல்) தவறாக தீர்மானிக்கப்பட்டார் (வழக்கம் போல்) ஏனெனில் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அவர் பிரச்சினையைப் பற்றி மக்களிடம் பகிரங்கமாகச் சொன்னதைவிரும்பவில்லை. அவள் இன்னும் நிகழ்ச்சிகளில் சரியாக இடம் பெறவில்லை, அதனால்தான் நான் என்று நினைக்கிறேன். அவருக்கு ஒரு நல்ல அங்கீகாரம் கிடைக்க வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement