ஒரு வேல இவரு பெரிய ஹீரோவாக்கிட்டா யோசிச்சி பாருங்க – அஸ்வினை கழுவி ஊற்றிய விஜய் டிவி பிரபலம்.

0
612
aswin
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் வந்தாலும் ஒரு சில நிகழ்ச்சிகள் மக்களின் பேராதரவை பெற்று விடுகிறது.அந்த வகையில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘குக்கூ வித் கோமாளி’ நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இரண்டாம் சீசன் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த சீசனில் ரசிகர்களுக்கு பரிட்சயமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் அஸ்வினும் ஒருவர். இந்த சீசனில் பலரது பெண்கள் மனதையும் கவர்ந்தவர் அஸ்வின் தான்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-73-1024x758.jpg

அஸ்வின், விஜய் டீவிக்கு புதிதானவர் அல்ல, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே போன்ற சீரியலில் நடித்துளளார். அதே போல ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சிறு ரோலில் நடித்து இருக்கிறார். இவர் செல்லமே என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்தார்.

- Advertisement -

இறுதியாக ‘ஓ மணப் பெண்ணே’ படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் முதல் முறையாக ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து இருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் அஸ்வின் பேசிய பேச்சுக்கள் சமூக வலைதளத்தில் பெரும் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது.

இதனால் அஸ்வினை சமூக வலைதளத்தில் கேலி செய்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பகல் நிலவு’ சீரியல் நடிகரும் திட்டம் இரண்டு இயக்குருமான விக்னேஷ் கார்த்திக், அஸ்வினின் இந்த பேச்சை மறைமுகமாக விமர்சித்து உள்ளார். இதுகுறித்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘ஒரு ஹீரோ தன்னுடைய முதல் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசியதை கேட்டேன். நான் இயக்குனர்களிடம் அடிக்கடி சொல்லிக்கொண்டே இருப்பேன் படம் நல்லா வரலன்னா நான் எப்படியாவது ரிலீஸ் பண்ண விடமாட்டேன்னு பேசி இருக்கார்.

-விளம்பரம்-
Soundarya Bala Nandakumar (Actress) Profile with Age, Bio, Photos and Videos

இன்னும் ஒரு படம் கூட ரிலீஸ் ஆகல அதுக்குள்ளயா ? அப்போ இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுடைய அவல நிலையை யோசித்துப் பாருங்கள். ஒருவேளை இவர் எதிர்காலத்தில் மிகப்பெரிய ஹீரோவாக மாறி விட்டால் என்ன நடக்கும். அவருக்கு கதை சொல்ல போற இயக்குனர்களுடன் மனநிலையை யோசிச்சா கொஞ்சம் இன்ட்ரஸ்டிங்கா தான் இருக்கு. லைட்டா கண் சிமிட்டினாள் கூட ஒருவேளை சார் தூங்குறாருன்னுல்ல தோணும். கண்டிப்பாக அதை பார்ப்பதற்கு சுவாரசியமாக தான் இருக்கும்’ என்று பதியிட்டுள்ளார்.

Advertisement