‘எத்தன தடவ தான் இதே பாட்ட போடுவீங்க’ விக்னேஷ் சிவன் பதிவிகளால் கேலி செய்யும் நெட்டிசன்கள்.

0
1580
- Advertisement -

இயக்குனர் விக்னேஷ் சிவன் தான் பதிவிடும் அனைத்து புகைப்படத்திற்கு கீழ் இன்ஸ்டாகிராம ஜெயிலர் படத்தில் தான் எழுதிய ரத்தமாறே பாடலை பதிவிட்டு வருகிறார். இதை யாரவது நிறுத்த சொல்லுங்கள் நெட்டிசன்கள் பலரும் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன்- நயன்தாரா இரட்டை பிள்ளைகள்:

விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து இருந்தார்கள். மேலும், இவர்கள் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றதாக ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். பின் இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். மேலும் தங்கள் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர்.

- Advertisement -

குழந்தைகள் புகைப்படம்:

இதனை அடுத்து கடந்த ஜூன் மாதம் தான் தங்களின் முதலாம் ஆண்டு திருமண நாளை தனது மகன்களுடன் நயன்தாரா-விக்னேஷ் சிவன் கொண்டாடி இருந்தார்கள். அது தொடர்பான புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. மேலும், விக்னேஷ் சிவன்- நயன்தாரா இருவரும் தங்கள் குழந்தைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை அடிக்கடி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவன் புகைப்படத்தின் கீழ் தான் ஜெயிலர் திரைப்படத்தில் எழுதிய ரத்தமாறே பாடலை பதிவேற்றி வருகிறார்.

வறுதேடுக்கும் நெட்டிசன்கள்

இயக்குனர் விக்னேஷ் சிவன் ரசிகர்கள் அவரை தற்போது கிண்டல் செய்து வருகின்றனர். அதில் சில கமெண்ட்டுகளில் “அண்ணே ரத்தமாறு கேட்டு கேட்டு காதுல ரத்தம் வந்திருச்சு அண்ணே.” என்றும் நெட்டிசன்கள் அவரது பதிவில் கமெண்ட்களை போட்டு வருகின்றனர். அந்தப் புகைப்படத்தில் அவரது குழந்தைகள் உயிர் உலக் புகைப்படங்களை பதிவேற்றியும் இந்த ரத்தமாறே பாடலை தொடர்ந்து பதிவேற்றி வருவதால் நெட்டிசன்கள் பலரும் அவரை வறுத்து எடுத்து வருகின்றனர்.

-விளம்பரம்-

அதற்க்கான காரணம் அது அவர் எழுதிய பாடல் என்பதால் தான் அதை அவர் தொடர்ந்து பதிவேற்றி வருகிறார் என்றும் பலர் அவரை விமர்சனம் செய்தும் கமென்ட் பாக்சில் அவர்களது காமெடி திறமைகளையும் பதிவேற்றியும் வருகின்றனர். இருப்பினும் இனி அந்த பாடலை பதிவேற்ற வேண்டாம் என்றும் கமென்ட் செய்து வருகின்றனர். அவர்களது இரட்டை குந்தைகளின் புகைப்படத்தை பதிவு செய்தும் அந்த பாடலை பதிவேற்றியும் வருகின்றனர்.

Advertisement