‘சைக்கோ, ஏன்டா இப்படிலாம் பண்ற’ – நானும் ரவுடி தான் படத்தின் போது விக்கியை திட்டியுள்ள நயன். ஏன்னு வீடியோ பாருங்க.

0
376
Nayanthara
- Advertisement -

தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடிகளாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவை நயன் காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். இப்படி ஒரு நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா, தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-461-1024x569.jpg

தாங்கள் மிகவும் privateஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை. ஆனால், நிச்சயம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்.
மேலும், இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களை தயாரித்து வருகிறார்கள். அதில் இவர்கள் இருவரும் கூட்டணியில் வெளிவந்த படம் நானும் ரவுடி தான். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

காத்துவாக்குல 2 காதல் படம்:

இதனைத் தொடர்ந்து தற்போது இவர்கள் மூவரும் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் பணி புரிந்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளர்கள். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

காத்துவாக்குல 2 காதல் ட்ரைலர்:

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி- ராம்போ, சமந்தா – கதீஜா, நயன்தாரா- கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டீசர், டிரெய்லர் எல்லாமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்கிற்கு வரவிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி:

இதனால் படத்தின் மீது ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து காத்துவாக்குல 2 காதல் படம் குறித்து பேட்டியளித்திருந்தார்கள். அதில் விக்னேஷ் கூறியிருப்பது, நானும் ரவுடி தான் படம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே காத்துவாக்குல 2 காதல் கதையை நயனிடம் சொன்னேன். அதற்கு முன்பே கதை தயாராக இருந்தது. நலனுக்கும் கதை பிடித்து பண்ணலாம் என்று சொன்னார். அது மட்டுமில்லாமல் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் பணிபுரிந்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நாங்கள் அப்போதே முடிவு செய்து வந்தோம்.

விஜய் சேதுபதி-நயன் முத்த காட்சி:

நயன் தான் கண்மணி கதாபாத்திரத்தில் பண்ணனும் என்று நான் அப்போதே முடிவு பண்ணி விட்டேன். இந்த படம் எங்களுக்கு ரொம்ப நெருக்கமான படம். அப்போது நாங்கள் லவ் பண்ணிட்டு இருந்தது பெரும்பாலும் யாருக்குமே தெரியாது. அதோடு நானும் ரவுடிதான் படம் பண்ணும்போது ஒரு நெருக்கமான முத்த காட்சி வரும். அப்போது நான் பண்ணலாமா? வேணாமா? என்று இருந்தேன். ஏன்னா, நாங்கள் காதலித்துக் கொண்டிருந்தோம். சரி, படம் தானே என்று நினைத்து எடுத்தேன். இருவரும் எதிர் எதிரே நின்றார்கள். நான் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நெருக்கமாக என்று சொல்லி கொண்டே இருந்தேன். உடனே நயன் என்கிட்ட வந்து ‘சைக்கோ, ஏன்டா இப்படியெல்லாம் பண்ற’ என்று என்னை திட்டி விட்டு சென்றார். அதற்குப் பிறகு தான் நாங்கள் காதலித்து பலருக்கும் தெரிந்தது என்று பல விஷயங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்திருக்கிறார்.

Advertisement