புத்தாண்டு பிறந்த நிலையில் இயக்குனர் மற்றும் நடிகை நயன்தாராவின் கணவரான விக்னேஷ் சிவம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஆண்டு நடந்த நிகழ்வுகளும் அவற்றுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நீண்ட பதிவை வெளியிட்டுள்ளார். இவர் தயாரிப்பில் வெளியான கனெக்ட் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இவர் வெளியிட்டுள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
சிறப்பான வருடம் :
அந்த பதில் `இந்த வருடம் என்னுடைய வாழ்க்கையில் சிறந்த வருடமாகும். 2020ஆம் ஆண்டு நடந்த பல மகிச்சியான விஷியங்கள் என்னுடைய வாழ்நாள் முழுவதும் நான் வயது ஆனா பிறகும் கூட எனக்கு மகிச்சியை தரும் என்று நம்புகிறேன். என்னுடைய வாழ்நாள் காதலியான என்னுடைய தங்கம் நயன்தாராவை எல்லா ஆசிகளுடன் திருமணம் செய்து கொண்டேன். பல சூப்பர் ஸ்டார்கள் முன்னிலையில் என்னுடைய திருமணம் நடந்தது என்னுடைய வாழ்நாளில் மிகச்சிறந்த வருடம் 2022.
எப்போது பார்க்கும் போதும் என்னுடைய கண்களில் கண்ணீரை வரவழைக்கும் இரண்டு குழந்தைகளை நான் பெற்றெடுத்தேன். என்னுடைய உதடுகள் அவர்களை தீண்டுவதற்கு முன்பாக என்னுடைய கண்ணீர் அவர்களை தீண்டி விடுகிறது. அந்த நேரத்தில் நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டவராக எண்ணுகிறேன், நன்றி கடவுளே.
காத்து வாக்குல இரண்டு காதல் :
நான் இயக்கிய “காத்து வாக்குல இரண்டு காதல்” திரைப்படம் வெளியிட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அந்த திரைப்படம் எப்போதுமே என்னுடைய மனதிற்கு அருகே இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட அருமையான நடிகர்களுடன் என்னுடைய ராஜா அனிருத் அவர்களுக்கு மிகவும் நன்றி. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு மிகவும் மகிழ்கிறேன். இன்னும் சில வருடங்களில் அந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வெற்றியடையும் என்று நம்புகிறேன்.
வாழ்நாள் கடமை :
பெருமை வாய்ந்த செஸ் ஒலிம்பிக் நிகழ்ச்சியை கையாளுவதற்கு எங்களுக்கு வாய்ப்பு கொடுத்த தமிழ்நாடு அரசுக்கு மிகவும் நன்றி. மேலும் மதிப்புக்குரிய அமைச்சர்கள், ஐ ஏ எஸ், ஐ பி எஸ் அதிகாரிகள், இந்திய மற்றும் பல நாடுகளை சேர்ந்த திறமைசாலிகளுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அதோடு மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலைமைச்சர் ஸ்டாலின், உலகநாயகன் கமலஹாசன், ஏஆர் ரகுமான், உதயநிதி ஸ்டாலின் போன்றவர்களுடன் என்னுடைய அம்மாவுடன் நான் அமர்ந்து உணவு அருந்தியது என்னுடைய வாழ்நாள் கடமை முடிந்ததாக உணர்கிறேன்.
கனெக்ட் :
மேலும் ரசிகர்களாகிய உங்களினால் தான் கனெட் திரைப்படம் இன்றும் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்குகளுக்கு வந்து எங்களுடைய படத்திற்கு மரியாதை கொடுத்து, வெற்றியை ஆண்டு முடிவின் போது தந்ததற்கும் எங்களை பெருமை படுத்தியதற்கும் மிகவும் நன்றி. நீங்கள் எங்களுக்கு கொடுத்த இந்த நம்பிக்கையை பயன்படுத்திக்கொண்டு நாங்கள் நேர்மையாக முன்னோக்கி செல்வோம்.
அஜித் 62 :
இப்போது ஒரு பெரிய வாய்ப்பில் கவனம் செலுத்த ஆவலுடன் காத்திருக்கிறேன் AK62!. இவ்வளவு பெரிய திரைப்படத்தை இயக்குவதற்கு மகத்தான ஆசிர்வாதம் அளித்த அஜித் சார் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஷ் கரண் சாருக்கு நன்றி. ஒரு உற்சாகமான, ஆசீர்வதிக்கப்பட்டதை எதிர்பார்க்கிறேன். நீங்கள் அனைவரும், நாங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிப்பீர்கள் என்று நம்புகிறேன். வாழ்க்கை எப்பொழுதும் சிறிய விஷயங்களைப் பற்றியது, அது நம்மை மகிழ்ச்சியாக்க கவனம் செலுத்துகிறது. பெரிய விஷயங்கள் தமதமாகவே இடத்தில் விழும். கடவுள் எல்லோரையும் ஆசிர்வதிக்கட்டும் என்று அந்த பதிவில் புத்தாண்டு வாழ்த்துக்களையும் கூறியிருந்தார் இயக்குனர் விக்னேஷ்.