விக்னேஷ் சிவன் நயன்தாரா காதலுக்கு புள்ளையார் சுழி போட்டதே தனுஷ் தானா – விக்கி சொன்ன விஷயம்.

0
423
- Advertisement -

விக்னேஷ் சிவன் – நயன்தாரா சேர்வதற்கு காரணமாக இருந்த பிரபல நடிகர் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக லேடி சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டிருப்பவர் நயன்தாரா. இவர் முன்னணி நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
கடந்த ஆண்டு இவர் நடிப்பில் அட்லீ இயக்கத்தில் வெளிவந்த ஜவான் படம் நல்ல விமர்சனத்தையும் வசூல் சாதனையும் செய்து இருந்தது. இதை தொடர்ந்து இவர் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே நயன்- விக்னேஷ் சிவன் இருவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்தார்கள். பின் அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

- Advertisement -

விக்னேஷ் சிவன்- நயன்தாரா குடும்பம்:

இவர்களின் திருமணத்தில் கோலிவுட் முதல் பாலிவுட் வரை என பிரபலங்கள் கலந்து இருந்தார்கள். அதன் பின் இவர்கள் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்று எடுத்து இருந்தார்கள். தங்கள் ஒரு பிள்ளைகளுக்கு உயிர் ருத்ரோனில் என் சிவன் என்றும் மற்றொரு பிள்ளைக்கு உலக் தெய்வீக் என் சிவன் என்றும் பெயர் வைத்துள்ளனர். தற்போது விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரும் தங்கள் இரட்டை குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா படங்கள்:

மேலும், இருவருமே தங்களுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் அவர்கள் தன்னுடைய கனவு திரைப்படமான எல்ஐசி என்ற படத்தை எடுக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் கீர்த்தி செட்டி, எஸ் ஜே சூர்யா நடிக்கிறார்கள். அதேபோல் நயன் அவர்கள் தமிழ், ஹிந்தி என பல மொழி படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல்:

இந்த நிலையில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா சேர்வதற்கு காரணமாக இருந்தவர் தனுஷ் என்ற தகவல் தான் தற்போது வெளியாகி இருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரவுடிதான் படத்தின் தயாரிப்பாளராக இருந்தவர் தனுஷ். இவர்தான் நயன்தாராவிடம் கதை சொல்லும்படி விக்னேஷ் இடம் சொல்லி இருக்கிறார். அதற்கு பிறகு தான் விக்னேஷ் சிவன் நயன்தாராவிடம் கதை சொன்னார். பின் இருவருக்கும் இடையே நட்பு உண்டாகி அது காதலாக மலர்ந்தது. வேலையில்லா பட்டதாரி படத்தில் இருந்து தனுஷுக்கும் விக்னேஷ்விற்கும் இடையே நட்பு உருவானது.

தனுஷ் செய்த வேலை:

அந்த பழக்கத்தால் தான் விக்னேஷ் சிவனுடைய படத்தை தனுஷ் தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் விக்னேஷ் சிவன், நானும் ரவுடிதான் படத்தின் கதையை நயன்தாராவிடம் சொல்ல தனுஷ் சார் தான் சொன்னார். நயனுக்கு கதை பிடித்துப் போனதால் அந்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க ஒத்துக் கொண்டார். முதலில் விஜய் சேதுபதி முடியாது என்று சொன்னார். நயன்தாரா நடிக்க வருகிறார் என்று சொன்னவர் தான் சம்மதம் சொன்னார். அந்த படத்தின் போது தான் நயன்தாராவுடன் எனக்கு அதிக நேரம் செலவிட முடிந்தது. அதற்குப் பிறகு நாங்கள் சில வருடம் டேட்டிங் செய்தோம். அப்படியே எங்களுடைய காதல் கல்யாணத்தில் முடிந்தது. எங்களுடைய சந்திப்புக்கு காரணமாக இருந்தவர் தனுஷ் தான் என்று கூறியிருந்தார்.

Advertisement