சூப்பர் ஹிட் அடித்த நீயா நானா எபிசோட் – தங்க மீன்கள் முத்த வசனத்தை போட்ட விக்கி – கேலி செய்த நெட்டிசன்கள். காரணம் இதான்.

0
494
vignesh
- Advertisement -

கடந்த இரண்டு வாரமாக நீயா நானா நிகழ்ச்சி தான் சமூக வலைதளத்தில் ஹாட் டாப்பிக்காக இருந்து வருகிறது. 2006 ஆம் ஆண்டு முதல் கோபிநாத் அவர்கள் “நீயா ஆண்டு என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றத் தொடங்கினார். ஒரு தலைப்பு எடுத்து கொண்டு அதை ஆதரிப்போரையும், எதிர்ப்போரையும் எதிர் எதிராக அமர வைத்து சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நிகழ்ச்சி தான் “நீயா நானா” நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. சமுதாயத்தில் உள்ள பழமை வாதங்களுக்கு எதிரான இவர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.அதிலும் அழகு, பெண்கள், காதல், திருமணம், குடும்பம், நட்பு, ஆண்கள், பெண்கள், அரசியல், சட்டம், சமுதாயம், கல்வி விளையாட்டு, சமூக ஊடகம் என்று பல தலைப்புகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்த நிலையில் கடந்த வாரம் நிகழ்ச்சியில் வேலைக்கு அமர்த்திய குடும்ப தலைவிகள் vs பணிப்பெண்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று இருந்தது. அந்த எபிசோடில் கோபிநாத்தின் பேச்சும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பேச்சும் பலரை நெகிழிச்சியில் ஆழ்த்தியது. இப்படி ஒரு நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள் என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஒளிபரப்பகி இருந்தது.

- Advertisement -

அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள்

அந்த எபிசோடில் கோபிநாத்தின் பேச்சும் வீட்டு வேலை செய்யும் பெண்களின் பேச்சும் பலரை நெகிழிச்சியில் ஆழ்த்தியது. இப்படி ஒரு நிலையில் நேற்று ஒளிபரப்பான நிகழ்ச்சியில் அதிகம் சம்பாதிக்கும் பெண்கள் Vs கணவர்கள் என்ற தலைப்பில் இன்று நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மனைவி ஒருவர் தன் கணவருக்கு படிக்கத்தெரியாது, மகளின் ரேங்க் கார்டை கூட அவர் ஒரு மணி நேரம் பார்த்துவிட்டு கையெழுத்து போடுவார் என்று ஏளனமாக பேசி இருந்தார். இதுகுறித்த பேசிய அந்த பெண்ணின் கணவர் ‘நான் பள்ளியில் படிக்கும் போது  7 மார்க், 8 மார்க்னு வாங்குவேன்.

படிக்காத தந்தையின் ஏக்கம் :

ஆனால், என் மகள் 80, 90 மார்க் வாங்குவதை பார்க்கும் போது எனக்கு மிகுந்த ஆனந்தமாக இருக்கிறது. அதனால் தான் ஒரு மணிநேரம் பார்க்கிறேன்’ என்று கூறி வெகுளியாக கூறி இருந்தார்.தன் மகள் வாங்கிய மதிப்பினை ஒரு அப்பன் ஒரு மணி நேரம் பார்க்கிறானே அதில் என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அந்த பெண்ணை கோபிநாத் கேட்டதற்கு அவர் ஏ பி சி டி தான் படித்துக் கொண்டிருப்பார். அவர் இன்னும் 90ஸ்ல தான் இருக்கார் என்று கேலி செய்ய உடனே கோபிநாத் அந்த பெண்ணின் மகளை அழைத்து அவருக்கு சிறந்த அப்பா என்று பரிசையும் வழங்கினார்.

-விளம்பரம்-

ஹிட் அடித்த எபிசோட் :

மேலும், அந்த மகளிடம் உன் அப்பா இன்னும் தோற்கவில்லை என்று கூற அதற்கு அந்த மகளும் என் அப்பா தோற்கவில்லை, அவர் எனக்காக தான் கஷ்டப்படுகிறார் என்று கண்ணீர் மல்க கூறியது பலரை கண்ணீரில் ஆழ்த்தியது. இந்த எபிசொட் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சூப்பர் அப்பா என்று பலரும் அந்த தந்தையை பாராட்டி வருகின்றனர். அதே போல தன் கணவரை ஏளனம் செய்த அந்த பெண்ணை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர்.

பிரபலங்கலை கவர்ந்த எபிசோட் :

மேலும் இந்த எபிசோடை கண்டு ரசிகர்கள் மட்டுமல்லாது பல்வேறு பிரபலங்களும் சமூக வலைதளத்தில் இந்த தந்தையையும் கோபிநாத்தையும் பாராட்டி வந்தனர் இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவன் தன்னுடைய பிரிட்டர் பக்கத்தில் ‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று’ என்று பதிவிட்டு இருக்கிறார். ஆனால், இந்த பதிவை பலரும் கேலி செய்ய துவங்கி இருக்கின்றனர்.

தவறாக புரிந்து கொண்ட நெட்டிசன்கள் :

அதற்கு காரணம் ‘தங்கமீன்கள்’ படத்தில் இடம்பெற்ற ‘ஆனந்த யாழை’ பாடலின் ஆரம்பத்தில் வரும் ‘மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று’ என்ற வரிகளை விக்னேஷ் சிவன் முத்தம் காமத்தில் சேர்ந்ததன்று’ என்று குறிப்பிட்டு இருக்கிறார். அவர் குறிப்பிட்டுள்ள ‘சேர்ந்ததன்று’ என்ற வார்த்தையை பலர் சேர்ந்ததென்று என்று புரிந்து கொண்டு தமிழை ஒழுங்காக எழுதுங்கள் என்று கலாய்த்து வருகின்றனர்.

Advertisement