திருப்பதி கோவில் வளாகத்தில் செருப்பணிந்த சர்ச்சை – நயன் செயலால் மன்னிப்பு கேட்டு விக்னேஷ் சிவன் கடிதம் (ரெண்டாவது நாள்ளே இப்படியா)

0
445
nayanthara
- Advertisement -

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் தம்பதியினர் காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் சம்பவத்தால் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ள நிலையில் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருந்து வருவது விக்னேஷ் சிவன் நயன்தாரா திருமணம் தான். இவர்கள் திருமணம் கடந்த 9 ஆம் தேதி படு கோலாகலமாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் திரையுலகத்தை சார்ந்த முக்கிய நபர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

-விளம்பரம்-

மேலும், திருமணம் முடிந்த கையுடன் நயன்தாரா- விக்னேஷ் சிவன் திருப்பதிக்கு சென்றிருந்தார்கள். திருப்பதி மலையில் தம்பதிகள் ஏழுமலையான் கல்யாண உற்சவம் சேவையில் கலந்து கொண்டிருந்தார்கள். கோவிலுக்கு வெளியே காலணி அணிந்து நடமாட தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று இருவரும் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். தற்போது இது குறித்து தான் சோசியல் மீடியாவில் விவாதமாகவே மாறியிருக்கிறது.

- Advertisement -

தேவஸ்தான நிர்வாகம் கூறியது:

இந்நிலையில் இதை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் கூறி இருப்பது, நடைபெற்ற தவறுக்கு யாரும் காரணம் என்று விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏழுமலையான் கோவில் முன் உள்ள பகுதி, நான்கு மாட வீதிகள், லட்டு கவுண்டர்,கோவில் திருக்குளம் ஆகிய இடங்களில் காலணியுடன் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதோடு போட்டோ ஷூட் நடத்த தேவஸ்தானம் இடம் உரிய அனுமதி பெற வேண்டும். இதற்கு முன் இது போல் யாரும் கோவில் உள்ளே போட்டோ ஷூட் நடத்தியது கிடையாது.

விக்னேஷ் சிவன் விளக்கம் :

இது பற்றி அவர்களிடம் தகுந்த விசாரணை நடத்தி தேவையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு ஊழியர்கள் அவர்கள் தகுந்த அறிவுரை கூறி அங்கிருந்து அவர்களை அப்புறப்படுத்த தவற விட்டனர் என்று கூறி இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் தங்கள் செயலுக்கு மன்னிப்பு கேட்டு விக்னேஷ் சிவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ‘திருமணம் திருப்பதியில் நடக்க வேண்டும் என்றுவிரும்பினோம். ஆனால், சில தவிர்க்க முடியாத காரணங்களால் சென்னையில் திருமணத்தை நடத்தி இருந்தோம்.

-விளம்பரம்-

செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை :

எங்கள் திருமணம் முழுமையாக நிறைவடைய, திருமணம் முடிந்த கையோடு வீட்டுக்கு கூட செல்லாமல் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வந்தோம். இந்த நாளை நினைவில் வைத்துக் கொள்ள விரும்பி கோவிலுக்கு வெளியே போட்டோஷூட் நடத்தினோம். இதனால் திருப்பதியிலேயே திருமணம் நடந்தது போல் உணர்ந்தோம். ஆனால் மக்கள் கூட்டம் மற்றும் குழப்பம் காரணமாக கோவில் வளாகத்தை விட்டு வெளியேறிய போதும், போட்டோ எடுக்கும் போது செருப்பு அணிந்திருந்ததை உணரவில்லை.

மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் :

நாங்கள் இருவரும் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு தொடர்ந்து கோயில்களுக்கு செல்லும் தம்பதிகள் நாங்கள். கடந்த 30 நாட்களில் கிட்டத்தட்ட 5 முறை திருப்பதிக்கு சென்று திருமணத்தை அங்கே நடத்த முயற்சித்தோம். தாங்கள் நேசிக்கும இறைவனுக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை, இதனால் பக்தர்கள் புண்படுத்தப்பட்டிருந்தால் அவர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.’ என்று அதில் குறிப்பிட்டு இருக்கிறார். திருமணம் ஆன இரண்டாம் நாளே இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கி இருப்பது இவர்களது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement