மீம்ஸ் எல்லாம் நல்லா இருந்தது ஆனா – அரசு சொத்தை விலைக்கு கேட்டதாக வெளியான செய்தி குறித்து விக்கி விளக்கம்

0
217
- Advertisement -

அரசு சொத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் விலைக்கு கேட்டதாக வந்த செய்திகள் குறித்து தற்போது அவரே விளக்கம் அளித்துள்ளார். தமிழ் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நயன்தாரா. இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் இயக்குனர் கொண்டார். திருமணத்திற்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சினிமா மட்டுமில்லாமல் பல தொழில்களில் முதலீடு செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் புதுச்சேரி சென்று இருந்தார்

-விளம்பரம்-

அங்கு அவர் புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு சென்று சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை நேரில் சந்தித்து பேசி இருந்தார். அப்போது விக்னேஷ் சிவன், புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான ‘சீகில்ஸ்’ ஹோட்டலை விலை கேட்டதாகவும் அதற்கு, அது அரசு சொத்து அதை எல்லாம் விற்க முடியாது என்று அமைச்சர் கூறியதாகவும் செய்திகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால் விக்னேஷ் சிவனை இணையவாசிகள் கடுமையாக செய்திகள் மற்றும் மீம்கள் மூலம் விமர்சித்து இருந்தார்கள்.

- Advertisement -

அரசு சொத்து சர்ச்சை:

ஆனால், அதனைத் தொடர்ந்து அமைச்சர் லட்சுமி நாராயணன், திரைப்பட இயக்குனர் விக்னேஷ் சிவன், அயல்நாடுகளில் நடக்கும் இசை நிகழ்ச்சிகளைப் போல புதுச்சேரியிலும் தொடர்ச்சியாக நடத்துவதற்கு அனுமதி கேட்டு தான் வந்திருந்தார்’ என்று விளக்கம் அளித்து இருந்தார். ஆனால், அதை எதுவும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து விக்னேஷ் சிவனை இணையவாசிகள் ரோஸ்ட் செய்து வருகிறார்கள்.

விக்னேஷ் சிவன் விளக்கம்:

இந்நிலையில், தற்போது இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் விக்னேஷ் சிவன் விளக்கமளித்துள்ளார். அதில், அரசு சொத்தை நான் வாங்க முயன்றதாக சமூக வலைதள பக்கங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. அதனை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். புதுச்சேரி ஏர்போர்ட்டை பார்வையிட்டு அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்கவே நான் புதுச்சேரிக்குச் சென்றிருந்தேன். அப்போது ஒரு மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதலமைச்சரையும், சுற்றுலாத்துறை அமைச்சரையும் சந்தித்தேன்’.

-விளம்பரம்-

மீம்ஸ்கள் குறித்து:

அப்போது, எதிர்பாராத விதமாக லோக்கல் மேனேஜர் ஒருவர் அவருக்காக ஏதோ ஒரு விஷயம் தொடர்பாக விசாரித்துக் கொண்டிருந்தார். தற்போது இந்த தகவல் தவறுதலாக என்னுடன் இணைத்து சொல்லப்பட்டு வருகிறது. சமூக வலைதளப் பக்கங்களில் என்னைக் குறித்து பகிரப்படும் மீம்கள் நகைச்சுவையாக இருக்கிறது. அது எனக்கு உத்வேகமும் கொடுக்கிறது. ஆனால், அவையெல்லாம் தேவையற்றது. இதனால் இந்த தகவலை தெளிவுபடுத்த விரும்பினேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.

விக்னேஷ் சிவன் இயக்கும் படம்:

கடைசியாக விக்னேஷ் சிவன் அவர்கள் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தை எழுதி இயக்கியிருந்தார். நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடித்திருந்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர் இயக்கத்தில் ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சமீபத்தில் கூட இந்த படத்தில் இருந்து வெளியான ‘தீமா தீமா’ பாடல் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement