படம் நல்லா இல்லைனு சொன்னா ஏன் ஒப்பாரி வைக்குற?நெட்டிசன்கள் திட்டியதால் பதிவை நீக்கிய விக்னேஷ் சிவன்.

0
376
vikki
- Advertisement -

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக இருக்கும் நடிகை நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் “மாயா” என்ற திகில் சரவணன் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்திருந்தது. இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கைகோர்த்துள்ளார் நடிகை நயன்தாரா. இயக்குனர் அஸ்வின் ஏற்கனவே மாயா, கேம் ஓராவர் போன்ற திகில் திரைப்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளது.

-விளம்பரம்-

இப்படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவத்தின் ரவுடி தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் பிருத்வி சந்திரசேகர் இசையமைத்து, மணிகண்டன் கிருஷ்ணமாச்சரியர் ஒளிப்பதிவாளராகவும், ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் கிருஷ்ணமாச்சரியர் பணியாற்றியுள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நயன்தாரா நடித்த “கனெக்ட்” திரைப்படம் வெளியாகியிருந்தது.

- Advertisement -

மற்ற எந்த பிரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாத நடிகை நயன்தாரா “கனெக்ட்” திரைப்படத்தில் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். இப்படம் தன்னுடைய கணவரின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து என்பதினால் நிகழ்ச்சிக்கு வந்துள்ளார் என பலரும் விமர்சிக்க தொடங்கினர். மேலும் இப்படத்தின் ப்ரோமோஷனுக்கு விக்னேஷ் சிவன் அதிக செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் “கனெக்ட்” படம் வெளியானதை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் அந்த அளவிற்க்கு வரவேற்பு இல்லை, நடிகர் விஷால் நடித்த “லத்தி சார்ஜ்” திரைப்படமும் கனெக்ட் படமும் ஒன்றாக வெளியாகிய நிலையில் “லத்தி சார்ஜ்” படத்திற்கு இருந்த வரவேற்பு கூட இப்படத்திற்கு இல்லை. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இப்படத்தில் தயாரிப்பாளரான விகேஷ் சிவம் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-

அந்த பதில் கனெக்ட் படத்தின் போஸ்டரை பகிர்ந்து “கனெக்ட் படம் மிகத் திரில்லரான பேய் படமாக வந்திருக்கிறது இப்படத்தை தயாரித்த விக்னேஷ் சிவமிற்கு நன்றி. இதே போல சோர்வடையாமல் முன்னேறிக்கொண்டே இருங்கள் என்று ஒருவர் பகிருந்ததை ஷேர் செய்து `உங்களுடைய நேர்மையான விமர்சனங்களுக்கு நன்றி இந்த வன்மங்கள் நிறைந்த பொய்யான விமர்சனங்களில் இருந்தும், கருத்துக்களில் இருந்தும் எங்களை காப்பாற்றியதற்கு நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவம் போட்டிருந்த பதிவு வைரலாகவே நெட்டிசன்கள் பலரும் படம் சுமாராகத்தான் இருந்தது. எல்லா பார்வையாளர்களிடம் இருந்தும் நல்ல விமர்சனத்தை எதிர்பார்க்க முடியாது. உங்களுடைய படம் நன்றாக இல்லை என்று சொல்வதானால் ஏன் வன்மன் என்று சொல்லி ஒப்பாரி வைக்கிறாய் என்று நெட்டிசன்கள் பாலரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவனை திட்டி தீர்த்து வருகின்றனர்.

Advertisement