நயனுக்காக இந்த ரேஞ்சுக்கு இறங்கிட்டாரே விக்கி – முதன் முறையாக அவர் செய்துள்ள விஷயம். காரணம் இதுதான்.

0
509
nayan
- Advertisement -

நயன்தாராவுக்காக விக்கி செய்திருக்கும் செயல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கோலிவுட்டில் புதிய இளம் ஜோடிகளாக திகழ்ந்து கொண்டு இருப்பவர்கள் விக்னேஷ் சிவன்- நயன்தாரா. இருவருமே தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நபர்களாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். அதிலும் நயன் அவர்கள் நடிகை மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். சமீப காலமாக இவர் கதாநாயகிகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார்.

-விளம்பரம்-

அதனால் நாட்கள் செல்ல செல்ல இவருடைய ரசிகர்கள் கூட்டமும் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நயன் நடித்து இருந்தார். இந்த படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கி இருந்தார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். பல எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது.

- Advertisement -

நயன்தாரா நடிக்கும் படங்கள்:

இதனைத் தொடர்ந்து நயன்தாரா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் O2. இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படத்தை தொடர்ந்து நயன் அவர்கள் கனெக்ட், ஜவான், கோல்ட், காட்ஃபாதர், இறைவன் என்று பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இதனிடையே அனைவரும் எதிர்பார்த்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

இவர்களின் இல்லற வாழ்வு சிறக்க திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள். அதோடு கடந்த ஜூன் மாதம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருந்தது விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் தான். மேலும், திருமணம் முடிந்த கையுடன் இந்த தம்பதிகள் ஜோடியாக கோயிலுக்கு சென்று இருந்தார்கள். இதனைத் தொடர்ந்து இவர்கள் இருவரும் ஹனிமூனுக்காக வெளிநாடு சென்று அங்கு எடுத்த புகைப்படங்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது.

-விளம்பரம்-

விடுமுறை கொண்டாட்டம்:

சமீபத்தில் முடிவடைந்த 44வது செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை விக்னேஷ் சிவன் தான் நடத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் நயன்தாரா அவர்கள் தன்னுடைய கணவர் விக்னேஷ் சிவன் உடன் சேர்ந்து ஸ்பெயின் நாட்டில் ஜாலியாக விடுமுறையை கொண்டாடியிருக்கிறார். தற்போது இருவரும் தங்களின் பட வேலையில் கவனம் செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் நயன்தாராவின் விளம்பரத்தை விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நயன் நடித்த விளம்பரம்:

அதாவது, விக்னேஷ் சிவன் அவர்கள் தற்போது நயன்தாராவை வைத்து ஒரு டிவி விளம்பரத்தை இயக்கியிருக்கிறார். ஒரு பிரபல பிராண்டின் விளம்பரத்தில் நயன்தாராவை நடிக்க வைத்து விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கிறார். அந்த புகைப்படத்தை தான் தற்போது instagram பக்கத்தில் விக்னேஷ் சிவன் பகிர்ந்து, இதுதான் என்னுடைய முதல் டிவி விளம்பரம் என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த Fipola நிறுவனத்தில் நயன் தான் Brand Ambassador என்பதும் குறிப்பிடதக்கது. அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கும் பாணியில் விக்னேஷ் சிவன் பிஸியாக இருந்தாலும் நயன்தாராவிற்காக விளம்பரத்தை இயக்கி இருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement