நயனுடன் வது பிறந்தநாள், திருமணம் முடிந்து முதல் பிறந்தநாள் – தன் மனைவி மற்றும் தாய் குறித்து விக்னேஷ் சிவனின் உருக்கமான பதிவு.

0
459
nayan
- Advertisement -

திருமணத்திற்கு பின் தன் முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவுகளை போட்டு இருக்கிறார். தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்-விக்கி. இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஷயமாக இருந்தது.

-விளம்பரம்-

அனைவரும் எதிர்பார்த்த படி நயன்-விக்கி திருமண விழா சமீபத்தில் தான் மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி இருந்தது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் சுமார் 100 பேருக்கும் அதிகமானோர் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருந்தது. அதே போல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருந்தது.

- Advertisement -

விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம்:

பின் அடுத்த நாள் வரவேற்பு நிகழ்ச்சியும் நடந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது. கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணி முதல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இருந்தார்.

திருமணம் முடிந்து தம்பதியிகள் சென்ற இடம்:

இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். இவர்களுக்கு திருமண வீடியோ Netflixல் ஒளிப்பரப்பட்டு இருந்தது. திருமணம் முடிந்த கையோடு பல நாடுகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்கள் விக்கி – நயன் ஜோடி. இப்படி ஒரு நிலையில் திருமணம் முடிந்து தனது முதல் பிறந்தநாளை கொண்டாடி இருக்கும் விக்னேஷ் சிவன் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார்.

-விளம்பரம்-

நயனுடன் 8வது பிறந்தநாள் :

அதில் ‘‘நயன்தாராவுடன் நான் 8வது முறையாக பிறந்தநாள் கொண்டாடுகிறேன். என் தங்கமே உனக்கு எனது நன்றி! ஒவ்வொரு பிறந்த நாளையும் முந்தைய பிறந்தநாளை காட்டிலும் சிறப்பானதாக மாற்றியுள்ளாய். ஆனால் இந்த பிறந்தநாள் எனக்கு மிகவும் உணர்ச்சிவசமானது. உன்னை காதலியாக அடைந்ததற்கு நன்றி! என்னை மிகவும் மகிழ்ச்சி அடைய செய்வது எப்படி என்பது உனக்கு தெரியும். அதை நீதான் எனக்கு கற்றுக் கொடுத்தாய். நீ என்னை நேசிக்கும் விதம் என்னை மென்மேலும் மகிழ்ச்சி அளிக்கிறது’ என்று கூறியுள்ளார்.

அம்மாவின் கனவு :

மேலும், தனது அம்மா குறித்து பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன் ‘என் அம்மாவை வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதும், உயரமான கட்டிடங்கள், புதிய மனிதர்கள் மற்றும் புதிய விஷயங்களைப் பார்க்கும் போது அவள் முகம் மாறுவதைப் பார்ப்பதும் எப்போதுமே ஒரு கனவுதான் 🙂 அவள் முகத்தில் நான் தேடும் மகிழ்ச்சி. சாதனை உணர்வு, நான் செய்யும் அனைத்து கடின உழைப்புக்கும் அர்த்தம் தருகிறது. இந்த ஆண்டு எனது பிறந்தநாளைச் சுற்றியுள்ள தருணங்கள் … எனது குடும்பத்தினருடன் துபாய்க்குச் சென்ற நாட்கள் மற்றும் அவர்களுடன் நான் நேசித்த உற்சாகமும் மகிழ்ச்சியும் எப்போதும் என் இதயத்தில் இருக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement