‘உனக்கென்ன எல்லாம் நயன் காசு தான’ – பல கோடி மதிப்பிலான காருடன் விக்கி போட்ட வீடியோ கண்டு காண்டான நெட்டிசன்கள்.

0
628
vignesh
- Advertisement -

விக்னேஷ் சிவனுக்கு ரொம்ப பிடித்த கார் குறித்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களெல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று இருந்தது. இதனிடையே விக்னேஷ் சிவன்- நயன் காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

இவர்களின் திருமணத்திற்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர். அதுமட்டும் இல்லாமல் நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இல்லாமல் செல்வதே இல்லை. அதோடு நயன்தாரா-விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம் மிகவும் privateஆக முடிந்தது. ஆனால், திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்கள். நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.

- Advertisement -

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

இருந்தாலும் இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். சமீபத்தில் இவர்கள் இயக்கத்தில் வெளிவந்து இருந்த ராக்கி படம் நல்ல விமர்சனத்தை பெற்று இருந்தது. தற்போது விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் பணிபுரிந்து இருந்தார்கள். கடந்த வாரம் தான் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் கிரிக்கெட் பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் கதை:

இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதி அதிஷ்டம் இல்லாதவராக எது வேண்டும் என்று நினைத்தாலும் அது அவரை விட்டு செல்கிறது. இந்த நிலையில் இவருடைய வாழ்க்கையில் சமந்தா, நயன்தாரா இருவரும் வருகிறார்கள். இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வந்த விமர்சனத்தை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

அஜித்-விக்னேஷ் சிவன் கூட்டணி:

இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன், அஜித்தின் ‘ஏகே 62’ படத்தை விக்னேஷ் சிவன்இயக்குகிறார். சமீபத்தில் தான் இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது. லைகா புரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதத்தில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வலிமை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் குமாரின் மொத்த டீமும் ‘ஏகே 61’ படத்திற்கான வேலையில் மும்முரமாக இறங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவனுக்கு பிடித்த கார்:

இந்நிலையில் விக்னேஷ் சிவன் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், விக்னேஷ் சிவன் காரை டெஸ்ட் டிரைவ் செய்த புகைப்படம். இது குறித்து விக்னேஷ் சிவன் கூறியிருப்பது, ரொம்ப நாளாக ஃபெராரி கார் லோகோ தான் என்னுடைய போனில் கேசாக இருந்தது. இன்று அந்த காரை டெஸ்ட் ட்ரைவ் செய்து இருக்கிறேன். இது வேறு மாதிரியான மகிழ்ச்சியை தந்திருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதோடு காரை டெஸ்ட் ட்ரைவ் செய்யும்போது எடுத்த புகைப்படத்தையும் பதிவிட்டிருக்கிறார். மேலும், இந்த கார் 1 கோடி மதிப்பு என்று கூறப்படுகிறது.

Advertisement