Ak62ல இருந்து விலகிட்டீங்கலாமே – பத்திரிகையாளர் கேட்ட கேள்வியால் கடுப்பான விக்னேஷ் சிவன்.

0
705
Ak62
- Advertisement -

துணிவு படத்தை தொடர்ந்து ஜித் அடுத்ததாக AK 62 படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருபதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தை லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதுவும் படத்தில் நடிக்கும் நடிகர்களை தேடும் பணியில் படக்குழு இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜ் நடிக்க இருப்பதாகவும், வில்லனாக அரவிந்த சாமி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

-விளம்பரம்-

இப்படி AK62 படத்தை பற்றி பல தகவல்கள் தொடர்ந்து வெளியான நிலையில் இப்படத்தின் கதை அஜித்திற்கும், படத்தை தயாரிக்கும் லைகா நிறுவனத்திற்கும் பிடிக்காத காரணத்தினால் விக்னேஷ் சிவம் AK62வில் இருந்து விலகியதாக தகவல் வெளியானது. மேலும் அவருக்கு பதிலாக மகிழ் திருமேனி இயக்குவார் என்று கூறப்பட்டது. அதே போல Ak62 படத்தை மகிழ் திருமேனி தான் இயக்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியானது.

- Advertisement -

இதனை தொடர்ந்து கடந்த சில தினங்களாகவே சோகமான பதிவுகளை தனது சமுக வலைத்தகத்தில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் கூட விக்கி 6 பணிகளை முழு மனதுடன் விரைவில் தொடருவேன். இந்த கடினமான காலங்களில் நான் சந்தித்த கடவுளுக்கும் அனைத்து அன்பான மக்களுக்கும் நன்றி. உங்கள் அரவணைப்பு மற்றும் என் மீதான நம்பிக்கை என்னைக் கண்டறிய உதவியது.

இந்த கணிக்க முடியாத, நிச்சயமற்ற சூழலில் உயிர்வாழ எனக்கு நம்பிக்கையையும் அளித்தது.இன்று, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், எனது எதிர்காலத்தை எதிர்நோக்குகிறேன்.எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் சில இனிமையான ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டு #nevereverquit #believeinyourself #godisgood #trusttheuniverse போன்ற ஹேஷ் டேக்குகளையும் போட்டு இருந்தார்.

-விளம்பரம்-

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட AK62 படத்தின் அறிவிப்பு வெளியாகி ஓராண்டு ஆன நாளில் நானும் ரெளடி தான்’ படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலில் இடம்பெறும் கிடைச்சத இழக்குறதும்,இழந்தது கிடைக்குறதும், அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி பாடலின் மூலம் மீண்டும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். இந்த நிலையில் போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு நடவடிக்கை குறித்த ஆவணப்பட போட்டி மற்றும் காமிக்ஸ் தொடர் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு விருந்தினராக வந்து இருந்தார் விக்னேஷ் சிவன்.

இப்படி ஒரு நிலையில் இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த விக்னேஷ் சிவனிடம் ஏகே 62 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், “இந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத கேள்வி. இந்த நிகழ்ச்சி தொடர்பாக கேள்வியை கேளுங்கள் பதிலளிக்கிறேன். தேவையில்லாத கேள்வி” என பதிலளித்தார்.

Advertisement