சிம்பு, தனுஷ் படத்திற்கு முன்பே ஹீரோவின் நண்பராக நடித்துள்ள விக்னேஷ் சிவன், ப்பா எப்படி இருந்துள்ளார் பாருங்க.

0
437
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார்.தமிழ் திரையுலகில் 2012-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘போடா போடி’. இதில் ஹீரோவாக ‘யங் சூப்பர் ஸ்டார்’ சிம்பு நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக வரலக்ஷ்மி சரத்குமார் டூயட் பாடி ஆடியிருந்தார். இந்த படத்தினை இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். இது தான் விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் இயக்கிய முதல் படமாம்.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து 2014-ஆம் ஆண்டு வெளி வந்த ‘வேலையில்லா பட்டதாரி’ என்ற படத்தில் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் வலம் வந்திருந்தார். இப்படத்தில் கதையின் நாயகனாக பிரபல நடிகர் தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தினை வேல்ராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு நடிகர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடி தான்’ என்ற படத்தினை இயக்கினார் விக்னேஷ் சிவன்.

- Advertisement -

விக்கி – நயன் :

இதில் மக்கள் செல்வனுக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா இருவரது நடிப்பும் பெரிதாக பேசப்பட்டது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இப்படம் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இதில் இருந்து துவங்கியது விக்னேஷ் சிவனின் திரையுலக வெற்றி பயணம் மட்டும் அல்ல, கூடவே அவருடைய வாழ்க்கை துணையுடனான பயணமும் தான்.

Sivi (2007) - IMDb

விக்கி நடித்த முதல் படம் :

ஆம்.. இந்த படத்தில் இருந்தே இயக்குநர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலிக்க தொடங்கி விட்டனர். தற்போது, விக்னேஷ் சிவன் இயக்குநர் ஆவதற்கு முன்பு ஒரு ஹாரர் ஜானர் படத்தில் நடித்திருந்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. தமிழ் திரையுலகில் 2007-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘சிவி’. இந்த படத்தினை இயக்குநர் கே.ஆர்.செந்தில் நாதன் என்பவர் இயக்கியிருந்தார்.

-விளம்பரம்-

Vip படத்தில் சிறிய ரோல் :

இந்த படத்தில் ஹீரோவின் நண்பராக வலம் வந்திருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன். மேலும், படத்தில் விக்னேஷ் சிவன் உதவி இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறாராம். இதை தொடர்ந்து தான் இவர் Vip படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அப்போது தான் Vip படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதன் பின்னரே இவர் நானும் ரௌடி தான் படத்தை இயக்கி இருந்தார்.

Image

விருப்பமில்லாமல் நடித்துள்ள விக்கி :

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவன், Vip படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் இந்த படத்தில் நடிப்பதில் எனக்கு ஆர்வமில்லை. விருப்பம் இல்லாமல் தான் வேலை இல்லா பட்டதாரி படத்தில் நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தவர் அன்று வரவில்லை என்பதால் தான் தனுஷ் சார் என்னை நடிக்க வைத்தார் என்று கூறியிருக்கிறார்.

Advertisement