விக்கி பெரியப்பா சொன்னது போலவே தாலி கட்டிய நேரம் சரியில்லையா ?அடி மேல் அடி வாங்கும் விக்கி.

0
870
vignesh
- Advertisement -

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவம் சம்மந்தப்பட்ட திருமணம் செய்த நாளே சரியில்லை என்று அவரது சித்தப்பா சொன்னது தற்போது நிஜமாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழும் நயன்தாரா கடந்த ஆண்டு மற்றும் விக்னேஷ் சிவம் பல ஆண்டு காலமாக காதலித்து யாருக்குமே தெரியாமல் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்கள். இப்படி ஒரு நிலையில் இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி சென்னை Ecrல் உள்ள தனியார் சொகுசு விடுதியில் படு கோலாகலமாக நடைபெற்றது.

-விளம்பரம்-

அன்றே கணித்த விக்கி பெரியப்பா :

இந்நிலையில் இந்த திருமணத்தில் அவரது பெரியப்பா குடும்பத்தினரை விக்னேஷ் சிவம் அழைக்கவில்லை. இது குறித்து விக்னேஷ் சிவனின் பெரியப்பா பேசிய போது ‘இவர்கள் கூட ஒரு நல்ல பெரியவர்கள் இல்லை என்பது எனக்கு தெரிந்தது கல்யாண முகூர்த்த நேரம் எட்டிலிருந்து ஒன்பது மாதிரி வரை என்று சொன்னார்கள். ஒன்பதில் இருந்து 10 மணி வரை வேற எந்த சுபநிகழ்ச்சிகளை வேண்டுமானாலும் செய்யலாம் .ஆனால், இவன் தாலி கட்டுயது 10.25 சரியான குளிகை நேரம் இந்த நேரத்தில் எந்த ஒரு நிகழ்ச்சியை நடத்தினாலும் அது மீண்டும் ரிப்பீட் ஆகும்’ என்று கூறி கூறி இருந்தார்

- Advertisement -

திருமண நாளே தொடங்கிய பிரச்னை :

இப்படியொரு நிலையில் நயன் மற்றும் விக்னேஷ் தம்பதிக்கு திருமணத்தில் இருந்து ஏகப்பட்ட சர்ச்சைகளை சந்தித்து வருகின்றனர். அதாவது நயன் திருமணத்தின் போது ECR கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. கடற்கரை அனைவருக்கும் பொதுவானது என்பதினால் அங்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்படட நிலையில் மனித உரிமை மீறல் என்று கூறி தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இது அப்போது பெரிய சற்சயாக வெடித்து. இப்படி ஒரு பிரச்னை முடிய மற்றறொரு பிரச்சனை தொடங்கியது.

திருப்பதி காலனி சர்ச்சை :

நயன் மற்றும் விக்கி திருமணம் முடிந்த கையுடன் இவர்கள் ஜோடியாக திருப்பதி கோயிலுக்கு சென்றனர். ஏழுமலையான் கோவில் முன்புறம் உள்ள பகுதியில் காலணியுடன் சென்று இருவரும் போட்டோ ஷூட் நடத்தி இருந்தார்கள். இதை அறிந்த தேவஸ்தான நிர்வாகம் நயன்-விக்கி மீது நடவடிக்கை தேவஸ்தான முடிவு செய்து இருந்தது. இதனால் சோசியல் மீடியாவில் சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தரப்பிலிருந்து மன்னிப்பு கடிதம் கொடுத்து இருந்தார்கள்.

-விளம்பரம்-

வாடகைத்தாய் பிரச்னை :

இந்த பிரச்சனைக்கு பிறகு திருமணம் ஆகி வெறும் 4 மாதங்களில் வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றனர். இந்த விஷயம் தமிழ் நாட்டின் மருத்துவ அமைச்சர் வரையில் சென்று பெரிய சர்ச்சையாக மாறியது. ஆனால் விகேனேஷ் சிவம் 2021 டிசம்பர் மாதமே வாடகை தாய்முறையில் குழந்தை பெரும் ஒப்பந்தம் இவர்கள் பதிவு செய்து இருக்கிறார்கள். விசாரணை குழுவிடம் விக்னேஷ் சிவன் – நயன்தாரா வாடகை குறித்த ஆதாரங்களை சமர்ப்பித்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் பதிவு திருமணம் செய்ததற்கான ஆதாரங்களையும் சமர்ப்பித்து இருக்கிறார்கள்.

கைநழுவி போன AK62 :

இந்த நிலையில் இது முடிவுக்கு வருவதற்கு முன்னர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த AK62வில் இருந்து வாய்ப்பு கைநழுவி போனது. இதனை தொடர்த்து தற்போது விகேஷ் சிவன் அடித்து கண்டிப்பாக ஒரு சூப்பர் படத்தை கொடுக்க வேண்டும் என்றும் முயற்சி செய்து வருகிறார். இப்படி தொடர்ந்து பல துரதிஷ்டவசமாக விஷியங்கள் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு நடந்து கொண்டே இருப்பதினால் தான் மூன்றாம் திருமணம் செய்யலாம் என விக்னேஷ் சிவன் முடிவெடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ak62

மூன்றாவது முறை திருமணம் :

அதாவது நயன்தாரா மாற்றம் விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்ட நேரம் சரியில்லை என ஜோதிடர் ஒருவர் கூறியிருக்கிறார். இதனை சரி செய்யத்தான் தற்போது சில முயற்சிகள் எடுத்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் முதல் முறையாக வாழை மரத்திற்கு தாலி காட்டினார். அதற்க்கடுத்து நயன்தாராவிற்கு 2வது முறையாக தாலி கட்டினார் இந்நிலையில் தற்போது 3வது முறையாக நயன்தாராவிற்கு தாலி கட்ட இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளது.

Advertisement