சின்னப் பிள்ளைகளாக மாறிய நயன் – விக்கி. வைரலாகும் வீடியோ.

0
2531
vignesh
- Advertisement -

உலகம் முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அதன் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. வீட்டில் இருப்பது போரடிக்காமல் இருப்பதற்காக பலர் சமூக வலைத்தளங்களை பயன் படுத்தி வருகிறார்கள். இந்த சூழ்நிலையிலும் மக்கள் தங்களை இயல்பாக வைத்துக் கொள்ள பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் மிகவும் டிரெண்ட் ஆக இருப்பது FACEAPP எனும் செயலி. இதன் மூலம் ஆண்கள் பலரும் தங்களை பெண் உருவத்தில் மாற்றியும், பெண்கள் தங்களை ஆண் உருவத்தில் மாற்றியும் புகைப்படம் வெளியிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CBtI_1mB2LB/

அந்த வகையில் தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து face app மூலம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் நயன் மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் சிறு பிள்ளை போல மிக குயூடாக இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

- Advertisement -

தமிழ் திரைப்பட உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். தற்போது நயன்தாரா அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருவது அனைவருக்கும் தெறிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவே பொறாமை படும் காதல் ஜோடியாக இருந்து வருகிறார்கள். நானும் ரவுடிதான் படத்தின் மூலம் இவர்களுடைய காதல் படர ஆரம்பித்தது. பிறகு தமிழ் சினிமாவில் எத்தனையோ காதல் தம்பதிகள் இருந்து வந்தாலும் தற்போது தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான்.

nayanthara-vignesh

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கும், அவருடைய காதலர் விக்னேஷ் சிவனுக்கும் கொரோனா அறிகுறி உள்ளதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதுகுறித்து விளக்கமளித்த நயன்தாரா தரப்பினர் இருவருக்கும் எந்த கொரோனா தொட்றும் இல்லை என்றும் இருவரும் நலமுடன் இருக்கின்றனர் என்றும் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement