தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஹாட் காதல் ஜோடிகளாக திரையுலகில் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா சிம்பு மற்றும் பிரபுதேவாவை காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் இருவர் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம்.
இப்படி ஒரு நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாராவிடம், அவர் கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு நயன்தாரா, இது நிச்சயதார்த்த மோதிரம். தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார். தாங்கள் மிகவும் privateஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை. ஆனால், நிச்சம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்.
ரகசிய திருமணம் முடிந்ததா ?
இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் நடிகை நயன்தாரா. அதில் ஒரு புகைப்படத்தில் நடிகை நயன்தாராவின் நெற்றி வகிடில் குங்குமம் இருந்தது தான் தற்போது நயன்தாராவுக்கு திருமணம் ஆகிவிட்டதா? என்கிற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஏற்கனவே ரகசிய திருமணத்தை முடித்துவிட்டதாக ஒரு புதிய கிசுகிசு கிளம்பி இருந்தது.
நயன் – விக்கி திருமணம் :
ஆனால், அதுவும் வதந்தி என்று தான் பின்னர் தெரிந்தது. இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் – நயன் திருமணம் குறித்த செய்தி ஒன்று டோலிவுட் வட்டாரத்தில் உலா வந்து கொண்டு இருக்கிறது. தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து படத்தை இயக்க இருக்கிறார்.
அஜித் படம் வெளியானதும் திருமணம் :
அந்த படம் முடிந்த உடனே விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. அதே போல தனக்கு திருமணம் நடந்தால் அனைவரிடமும் சொல்லிவிட்டு தான் செய்வேன் என்று நயன் ஏற்கனவே கூறி இருந்தார் என்பதும் கூறிப்பிடத்தக்கது. தற்போது நயன்தாரா ஹிந்தியில் ஷாருக்கானின் லயன் படத்தில் நடித்து வருகிறார். அது போல தெலுங்கில் காட்பாதர், தமிழில் கனக்ட் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
தந்தையின் ஆசை :
இந்த படங்களை தொடர்ந்து நயன்தாரா வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. எனவே, திருமணத்தால் தான் நயன்தாரா வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல நயன்தாராவின் அப்பா பல வருடங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்து வருகிறார். அதனால் விரைவில் தன் மகளுக்கு திருமணம் செய்துவைக்க ஆசைப்பட்டதால் தான் நயன் சிம்பிளாக நிட்சயதார்த்தத்தை கூட செய்துகொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.