‘நான் ஒன்றும் குழந்தை இல்லை’ – விக்கி நயனின் திருமண வீடியோ, Netflix வெளியிட்ட Promo.

0
333
vikki
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து இருந்த நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் குறித்த ப்ரோமோ தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஹாட் காதல் ஜோடிகளாக இருந்தவர்கள் நயன்-விக்கி. இருவரும் காதல் பறவைகளாக சினிமா உலகிலும், வெளி உலகிலும் வலம் வந்து கொண்டிருந்தாலும் இருவரும் படங்களில் பிசியாக பணி புரிந்து வருகிறார்கள். இருந்தாலும் இவர்களின் திருமணம் எப்போது? என்பது தான் பிரபலங்கள் முதல் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த விஷயமாக இருந்தது.

-விளம்பரம்-

அனைவரும் எதிர்பார்த்த படி நயன்-விக்கி திருமண விழா மெஹந்தி நிகழ்ச்சியுடன் கோலாகலமாக தொடங்கி இருந்தது. அந்த விழாவில் அவர்களுக்கு நெருக்கமான நண்பர்கள் மட்டும் கலந்து கொண்டிருந்தனர். அதுமட்டும் இல்லாமல் அந்த நிகழ்ச்சியில் பல வித்தியாசமான சம்பவங்கள் நடைபெற்று இருந்தது. அதே போல் வந்தவர்களுக்கு நயன்தாரா- விக்னேஷ் சிவன் புகைப்படம் ஸ்டிக்கர் ஒட்டிய தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டிருந்தது. மேலும், அனைவரும் எதிர்பார்த்த ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் விக்னேஷ் – நயன்தாரா திருமணம் வெகு விமர்சையாக பிரம்மாண்டமாக நடந்தது.

- Advertisement -

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமணம்:

கடற்கரை ஓரம் திறந்தவெளியில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் காலை 9 மணி முதல் இந்து பாரம்பரிய முறைப்படி மணமகள் நயன்தாரா கழுத்தில் விக்னேஷ் சிவன் தாலி கட்டி இருந்தார். இந்த திருமணத்தில் இரு வீட்டாரும், அவருடைய நெருங்கிய நண்பர்களும், சில முக்கிய பிரபலங்கள் மட்டுமே பங்கேற்றிருந்தனர். இவர்களுடைய திருமண உடைகள் புகழ்பெற்ற ஜேட் குழுமத்தால் நவீன உடைகள் ஏற்றவாறு பாரம்பரியம் சற்றும் குறையாத வண்ணம் வடிவமைக்கப்பட்டிருந்தது. நடிகை நயன்தாரா சிவப்பு நிற புடவை, விக்னேஷ் சிவன் வேஷ்டி குர்த்தி மற்றும் சால்வை ஒன்றை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

nayanthara

திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமை:

மேலும், இவர்களுடைய திருமண நிகழ்வின் ஒளிபரப்பு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் நெட்பிளிக்ஸ் வாங்கியிருந்தது. இதனாலே திருமணத்திற்கு வந்த பத்திரிகையாளர்களுக்கும், பிரபலங்களுக்கும் செல்போனில் புகைப்படம் எடுக்க அனுமதி வழங்கப்படவில்லை. அது மட்டும் இல்லாமல் திருமணத்திற்கான சாப்பாடு, ஹோட்டல் அறைகள், டெக்கரேஷன், மேக்கப், பாதுகாப்பு உள்ளிட்ட பல செலவுகளையும் நெட்பிளிக்ஸ் நிறுவனமே பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது. கிட்டதட்ட 25 கோடி ரூபாய் வரை இந்த நிறுவனம் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு செலவு செய்ததாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-

விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண ப்ரோமோ:

மேலும், ரசிகர்கள் பலரும் நயன்தாரா – விக்னேஷ் சிவனின் திருமணம் ஓடிடியில் எப்போது வெளியாகும்? என்று ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டு வருகின்றனர். சுமார் ஒரு மாதமாகவே இவர்களுடைய திருமண வீடியோ குறித்து கேள்வியும் எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சிலர் நெட்பிளிக்ஸ்க்கும், நயன்தாரா- விக்னேஷ் சிவன் தரப்புக்கும் இடையே பிரச்சனை இருக்குமா? என்றெல்லாம் கூறியிருக்கின்றனர். இந்த நிலையில் நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த புரோமோ வீடியோ ஒன்றை தற்போது நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது twitter பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

நயன்-விக்கி கூறியது:

அதில், திருமணத்திற்கு நடக்கும் ஏற்பாடுகள் உள்ளிட்டவை காட்டப்பட்டு இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் பேசும் காட்சிகளும் இருக்கிறது. நயன் குறித்து விக்னேஷ் சிவன் கூறி இருந்தது, நயன் சிறந்த நடிகை என்பதெல்லாம் தாண்டி மிக சிறந்த மனிதர் என்று கூறியிருக்கிறார். அதேபோல் நயன்தாரா அவர்கள் சொன்னது, நான் ஒன்னும் சினிமா குழந்தை கிடையாது. நான் ஒரு சாதாரண பெண். எதை செய்தாலும் அதில் நான் 100 சதவீதத்தை கொடுப்பேன் என்று பேசுகிறார். தற்போது இவர்களின் திருமணம் குறித்த புரோமோ வீடியோ தான் சோசியல் மீடியாவில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Advertisement