நாங்கெல்லாம் MBA பட்டதாரி இல்ல – செம்பருத்தி சர்ச்சைக்கு மத்தியில் டாக்டருடன் விக்கி போட்ட பதிவு

0
470
- Advertisement -

நயன்தாராவின் செம்பருத்தி பூ சர்ச்சைக்கு இடையில், தற்போது விக்னேஷ் சிவன் பகிர்ந்த பதிவு தான் தற்போது பேசும் பொருளாக உள்ளது. நயன்தாரா அவர்கள் செம்பருத்தி டீ உடம்புக்கு ரொம்ப நல்லது. அவர் தினமும் செம்பருத்தி டீ குடித்து வருவதாக தெரிவித்து இருந்தார். அதோடு அந்த டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிட்டு பகிர்ந்திருந்தார் நயன்தாரா. அதைத்தொடர்ந்து இந்த டீயை தனக்கு பரிந்துரை செய்தவரையும் டேக் செய்து, ரெசிபி வேண்டுமென்றால் அவரிடம் கேட்டுக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார் நயன்.

-விளம்பரம்-

இந்தப் போஸ்ட்டை பார்த்த நயனின் ரசிகர்கள் சூப்பர் தகவல், நாங்கள் கண்டிப்பாக ட்ரை பண்ணுகிறோம் என்று நயனை பாராட்டி பதிவிட்டு இருந்தனர். இந்நிலையில் நயன்தாராவின் போஸ்டை பார்த்த மருத்துவர் லிவர் டாக் என்பவர் இதைக் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் விமர்சித்து இருந்தார். அதில், நடிகை சமந்தாவை விட அதிக ஃபாலோயர்ஸ் வைத்திருக்கும் சினிமா நடிகை நயன்தாரா. தன்னைப் பின் தொடரும் 8.7 மில்லியன் ஃபாலோயஸ்களும் செம்பருத்தி டீ குறித்து தவறான அறிவுரையை கொடுத்துள்ளார்.

- Advertisement -

லிவர் டாக் பதிவு:

செம்பருத்தி டீ சுவையானது என்பதுடன் அவர் நிறுத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், ஆரோக்கியம் பற்றி தனக்கு தெரியாத அட்வைஸ் எல்லாம் அவர் பகிர்ந்திருக்கிறார். மேலும், நயன்தாராவின் பதிவை பார்த்தால் டயட் மற்றும் நியூட்ரிஷனில் மாஸ்டர்ஸ் டிகிரி வைத்திருக்கும் தனது செலிப்ரட்டி ஃபிரண்டுக்கு விளம்பரம் கொடுக்க போஸ்ட் போட்டது போல தெரிகிறது. நீங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் உண்மையான டாக்டர்களின் அறிவுரையை கேளுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

நயன்தாராவின் பதில்:

இப்படி டாக்டர் லிவர் டாக் செய்த விமர்சனத்திற்கு பிறகு நயன்தாரா தனது சமூக வலைதள பக்கத்தில் இருந்து அந்த போஸ்ட்டை டெலிட் செய்திருந்தார். பிறகு மீண்டும் தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தன்னை விமர்சித்த லிவர் டாக்க்கு பதிலடி கொடுக்கும் வகையில், முட்டாள்களுடன் ஒருபோதும் வாதாடாதீர்கள். அவர்கள் உங்களை அவர்களுடைய நிலைக்கு இழுத்துச் செல்வார்கள். உங்களையும் தோற்கடிக்கவும் நினைப்பார்கள் என்று பதிவிட்டிருந்தார். அதைத் தொடர்ந்து செம்பருத்தி டீயின் பயன்களையும் ரெசிப்பியையும் பகிர்ந்திருந்தார் நயன்.

-விளம்பரம்-

விக்கி – நயனின் பிசினஸ்கள்:

இதனிடையில் நயன்தாரா நடிப்பு மட்டுமின்றி, பல பிசினஸ்களை செய்து வருகிறார். அவர் தனது அழகு பிராண்டையும் 9 ஸ்கின் என்ற பெயரில் தொடங்கினார். தி லிப்பாம் நிறுவனமும் நயன்தாராவின் மற்றொரு முயற்சியாகும். ஃபெமி 9 என்ற பெயரில் சானிட்டரி பேட் நிறுவனத்தையும் தொடங்கினார். மேலும், சில உணவு நிறுவனங்களுக்கு ஃபண்டிங் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுபோல் பல பிசினஸ்களை செய்கிறார். இந்நிலையில் நடிகர்களுக்கு இதுபோல் பிசினஸ் குறித்து என்ன தெரியும், அவர்களுக்கு அது குறித்து என்ன பகுத்தறிவு இருக்கும் என்ற கேள்விகள் எல்லாம் எழுப்பப்பட்டது.

விக்னேஷ் சிவன் பதிவு:

தற்போது செம்பருத்தி டீ சர்ச்சைக்கு பிறகு, விக்னேஷ் சிவன் எல்லாவற்றிற்கும் அவரின் பதிவில் பதில் அளித்துள்ளார். அதில், ‘ நாங்கள் எம்பிஏ பட்டதாரிகள் இல்லை. எனக்கும் நயன்தாராவுக்கும் சினிமா தான் தெரியும். அதை தினமும் நாங்கள் கற்றுக்கொள்கிறோம். நாங்கள் எப்படி எங்கள் பிசினஸ்களை மேனேஜ் செய்கிறோம் என்றால் டாக்டர் வேலுமணி போன்றோரின் மகத்தான அறிவு மற்றும் விலைமதிப்பற்ற அனுபவத்தினால் தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், நாங்கள் எப்போதும் சரியான விஷயங்களை தான் செய்கிறோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம் என்றவாறு குறிப்பிட்டுள்ளார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவுதான் தற்போது வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.

Advertisement