தனுஷ் பற்றி புகழ்ந்து பேசிய இயக்குனர்கள், விக்னேஷ் சிவன் கொடுத்த ரியாக்ஷன்

0
229
- Advertisement -

தனுஷ் பற்றி இயக்குனர்கள் புகழ்ந்து பேசும்போது விக்னேஷ் சிவன் கொடுத்த ரியாக்ஷன் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில நாட்களாகவே தனுஷ்-நயன்தாரா இடையேயான பஞ்சாயத்து தான் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகைகளில் ஒருவராகவும், லேடி சூப்பர் ஸ்டார் நடிகைகளில் நயன்தாரா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது இவர் பிஸியாக படங்களில் நடித்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

இதற்கு இடையே இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக சென்னை மாமல்லபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றிருந்தது. இந்த திருமணத்தில் பிரபலங்கள் பலருமே கலந்து கொண்டிருந்தார்கள். மேலும், இந்த திருமணத்தை ஆவணப்படுத்தி ஒளிபரப்பு உரிமையை Netflix நிறுவனம் பெற்று இருந்தது. இதனால் திருமணம் தொடர்பான வீடியோக்கள் எதுவுமே வெளியாகவில்லை. விக்கி – நயன் திருமணத்தினுடைய ஆவணப்படுத்தப்பட்ட வீடியோவை ‘ Beyond the Fairy Tale’ என்ற பெயரில் உருவாக்கி இருந்தார்கள்.

- Advertisement -

நயன் – தனுஷ் சர்ச்சை:

மேலும், இந்த திருமண நிகழ்வு வீடியோ கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நிலையில், அதற்கு முன்பே இந்த வீடியோவின் ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. அதில் மூன்று வினாடி ‘நானும் ரவுடிதான்’ படத்தினுடைய காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனால் அந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நயன்தாராவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். இதனால் தனுஷ்- நயன்தாரா இடையே பெரிய சர்ச்சை வெடித்து இருந்தது. அதனால், நயன்தாரா தனுஷ் மீது குற்றம் சாட்டை கடிதம் ஒன்று வெளியிட்டு இருந்தார்.

நயன்தாரா போஸ்ட்:

அதில், ‘என்னுடைய ஆவணப்படத்திற்கு எதிராக நீங்கள் கொண்டிருக்கும் பழிவாங்கும் எண்ணம் தெளிவாக புரிகிறது. இது ரொம்ப தவறான செயல். மேடையில் நீங்கள் அன்பானவர் போல் பேசிவிட்டு நேரடியாக நடக்கும்போது பல வித்தியாசங்களை காட்டுகிறீர்கள். மக்களை நீங்கள் ஏமாற்ற முடியாது. நீங்கள் பொய்யான கதைகளையும், பஞ்ச் வசனங்களை ஆடியோ வெளியீட்டில் கொடுக்கலாம். ஆனால், கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். உங்களின் கீழ்த்தரமான இந்த செயல் ஒரு மனிதராக நீங்கள் எப்படிப்பட்டவர்? என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என்று குறிப்பிட்டிருந்தார். அதோடு, கடந்த இரண்டு ஆண்டுகளாகவே , நானும் ரவுடிதான் படத்தின் காட்சிகளை பயன்படுத்த கோரிக்கை விடுத்தும் தனுஷ் NOC தரவில்லை என்றும் நயன்தாரா குறிப்பிட்டு இருந்தார்.

-விளம்பரம்-

தனுஷ் தொடர்ந்து வழக்கு :

அதை தொடர்ந்து, தனுஷின் எதிர்ப்பை மீறி கடந்த நவம்பர் 18ஆம் தேதி வெளியான நயன்தாரா ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. அதனால், நயன்தாராவுக்கு எதிராக தனுஷ் அவர்களின் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் சென்னை ஹை கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கு தொடர்பாக நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி அப்துல் குத்தூஸ் தள்ளி வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்னேஷ் சிவன் ரியாக்ஷன்:

இந்நிலையில் சமீபத்தில் ‘The Galatta Plus Mega Pan India Director’s Round Table 2024 ‘ நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பரத்வாஜ் ரங்கன் தான் தொகுத்து வழங்கியிருந்தார். அதில், தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி, ‘வாத்தி’ படத்தை தெலுங்கு ஹீரோக்கள் நிறைய பேர் ரிஜெக்ட் செய்த போதும் தனுஷ் அவர்கள் ஸ்கிரிப்ட்டை ஏற்றுக்கொண்டு நடித்தார் என்று தனுஷை பெருமையாக பேசி இருந்தார். அதேபோல் ‘அமரன்’ படத்தின் டைரக்டர் ராஜ்குமார் பெரியசாமியும் அமரன் படம் வெளியவதற்கு முன்பே, தனுஷ் அவர்கள் தன்னை நம்பி தன்னிடம் கதை கேட்டதாகவும் தனுஷை பெருமையாக கூறியிருந்தார். அந்த சமயத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் கொடுத்திருக்கும் ரியாக்சன் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement