Ak62வில் இருந்து விலகுவதை சூசகமாக ட்விட்டரில் அறிவித்த விக்னேஷ் சிவன் – உறுதி செய்த ரசிகர்கள்.

0
591
ak62
- Advertisement -

கோலிவுட் ஸ்டாரான பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி தளபதி விஜய் நடித்துள்ளார் “வாரிசு” திரைப்படத்துடன் ஒன்றாக வெளியானது. இப்படத்தை எச் வினோத் இயக்கியிருந்தார். மேலும் ரெட் ஜென்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது. மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இப்படம் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதோடு படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். மேலும் வாரிசு, துணிவு என இரண்டு படங்களுக்கு இடையே யார் அதிகம் வசூல் செய்தார் என்றது பெரும் சர்ச்சையாகவே மாறியது. இதில் இரு தரப்பு படக்குழுவினரும் தங்களுடைய படம் தான் இந்த பொங்கலின் வெற்றியாளர் என்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

அஜித்தின் AK 62 :

இந்த நிலையில் தான் அஜித் அடுத்ததாக AK 62 படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருபதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தை லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதுவும் படத்தில் நடிக்கும் நடிகர்களை தேடும் பணியில் படக்குழு இருந்து வந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

AK 62 நடிகர்கள் :

இதனையடுத்து அஜித் நடிக்கும் AK 62 படத்தில் வீரம், கீரிடம், பில்லா படங்களுக்கு பிறகு சந்தானம் நடிக்க இருகிறார் என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் பரவலாக பேச தொடங்கியுள்ளன. மேலும் இப்படத்தில் சந்தானம் காமெடியனாக மட்டும் நடிக்காமல் வேறு ஒரு கதாபாத்திரமாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

-விளம்பரம்-

AK 62ல் இருந்து விக்னேஷ் சிவன் விலகல் :

இப்படிப்பட்ட நிலையில் தான் ஆஜித் நடிக்க இருக்கும் AK 62 படத்தில் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இந்த படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவம் விளக்குவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படி நிலையில் தனது ட்விட்டர் Bioவில் இருந்து Ak62 என்ற பெயரை நீக்கி இருக்கிறார் விக்னேஷ் சிவன். இதனால் அஜித் படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகி இருப்பது உறுதியாகி இருக்கிறது.

Advertisement