என் படத்த புடிக்கலனு சொல்றவங்களுக்கு – ஹேட்டர்ஸ் குறித்து விக்னேஷ் சிவன் போட்ட பதிவு.

0
517
viki

சமீப காலமாகவே OTT தளங்களில் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனர். அதிலும் கொரனோ காலகட்டத்தில் பல உச்ச நட்சத்திரத்தின் படங்கள் கூட OTT தளத்தில் வெளியாகி வருகிறது. அதே போல பல்வேறு நடிகர் நடிகைகளும் வெப் சீரிஸ் தொடர்களிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, வெற்றி மாறன், விக்னேஷ் சிவன் ஆகியோர் காதல், அந்தஸ்து, கௌரவம் என்கிற கருவை மையமாக வைத்து ஒரு ஆந்தாலஜி திரைப்படத்தை இயக்கி Netflix தளத்தில் வெளியிட்டுள்ளனர். இப்படத்தினை ரோனி ஸ்க்ரூவாலாவின் RSVP Movies நிறுவனம் மற்றும் ஆஷி துவா சாராவின் Flying Unicorn Entertainment நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

நெட்ஃப்ளிஸ் Netflix நிறுவனம் தங்களது தளத்தில் இப்படத்தினை 190 நாடுகளில் ப்ரத்யேகமாக இப்படத்தினை வெளியிடுகிறது. இந்த பாவக் கதையில், தங்கம், ஓர் இரவு, லவ் பண்ண விட்டுடணும், வான் மகள் என்று நான்கு கதை வெளியாகி இருந்தது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, ஜாதிப் பெருமை, குடும்ப கௌரவம் குறித்து கேள்வியெழுப்பக்கூடிய, விமர்சிக்கக்கூடிய படங்களாகவே இந்தப் படங்கள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், பெருமையையும் கௌரவத்தையும் காப்பாற்றும் அமைப்பாக குடும்பம் இருக்கிறது என்பதுபோல முடிகின்றன இந்தப் படங்கள். 

இதையும் பாருங்க : இந்த ஆண்டு இந்த ட்ரெஸ்சைலாம் போட ஆசைப்பட்டேன் – கிளாமர் உடைகளில் வீடியோ வெளியிட்ட சமந்தா.

- Advertisement -

இதில் லவ் பண்ணா உட்றனும் என்ற தலைப்பில் விக்னேஷ் சிவன் ஒரு பகுதியை இயக்கி இருந்தார். ஊர்ப் பெரிய மனிதராக இருக்கும் வீரசிம்மன், தன் மகள் (அஞ்சலி) தன் ஓட்டுனரைக் காதலிப்பதை அறிந்து தன்னுடைய கையாள் நரிக்குட்டி உதவியுடன் இருவரையும் கொலை செய்கிறார். மற்றொரு மகள் (அஞ்சலி), வேறு ஒரு நபரை காதலிப்பதை அறியும் வீர சிம்மன், பின் அவரையும் கொல்லப் பார்க்கிறார். பின்னர் அவரை காப்பற்றுவதற்காக அஞ்சலை தான் ஒரு தன்பால் ஈர்ப்புடையவள் என்று தனது தந்தையிடம் கூறுகிறார்.

தான் தன்பால் ஈர்ப்புடையவளாக மாறக் காரணம் சிறு வயது முதலே தான் ஆண்களுடன் பேசாதது தான் காரணம் என்று கூறுகிறார் அஞ்சலி. பின்னர் வீட்டில் இருந்து தப்பிக்கும் அஞ்சலி, தான் ஒரு தன்பால் ஈர்ப்புடையவள் இல்லை என்றும் உங்களிடம் இருந்து தப்பிக்கத்தான் அப்படி சொன்னேன் என்றும் கூறுவார். இந்த 4 பாவக் கதைகளில் விக்னேஷ் சிவனின் கதை தான் கொஞ்சம் விமர்சனத்திற்கு உள்ளானது. பெண்கள் ஆண்களுடன் பேசாமல் இருந்தால் தன்பால் ஈர்ப்புடையவளாக மாறிவிடுவார்களா என்றெல்லாம் கேள்விகளை முன் வைத்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் தன்னுடைய கதையை பார்டியவர்களுக்கும் அதை வெறுத்தவர்களுக்கும் விக்னேஷ் சிவன் ட்வீட் ஒன்றை போட்டிருந்தார். அதில், பாவத் கதைகளுக்கு நீங்கள் கொடுத்த பேர் ஆதரவிற்கு நன்றி லவ் பண்ணா உட்டுர்ன்னும் படத்தை விரும்பி நீங்கள் கொடுத்த கருத்திற்கும் ஆதரவிற்கும் நன்றி. இந்த படத்தை பிடிக்காதவர்களுக்கு நீங்கள் சொன்ன குறைகளை பதிவிட்டு கொண்டு அடுத்த படத்தில் நான் சிறப்பாக கொடுக்கிறேன் என்று கூறியுள்ளார்.

Advertisement