‘இதை வார்த்தையால் சொல்ல முடியவில்லை’ – தல தோனியுடன் இணைந்த விக்னேஷ் சிவன். புகைபடத்துடன் பகிர்ந்து நெகிழ்ச்சி.

0
410
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் அதிகம் சிலம்பு, தனுஷ், அனிருத் உடன் தான் அதிகம் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களெல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று உள்ளது. இதனிடையே விக்னேஷ் சிவன், நயனை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர்களின் திருமணத்திற்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.

-விளம்பரம்-

தமிழ் சினிமாவில் பல ஆண்டு காலமாக காதல் ஜோடிகளாக வலம் வருபவர்கள் விக்னேஷ் சிவன்- நயன்தாரா. விக்னேஷ் சிவனுக்கு முன்பாக நயன்தாரா அவர்கள் சிம்பு, பிரபுதேவாவை காதலித்து நம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் நயன்தாரா மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். மேலும், இவர்கள் இருவரும் படங்களில் பிசியாக இருந்தாலும், அடிக்கடி வெளிநாடு செல்வது அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் போடுவது என்று காதல் புறாக்களாகவே இருக்கிறார்கள்.

- Advertisement -

விக்னேஷ் சிவன்- நயன்தாரா காதல்:

நடிகை நயன்தாரா எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவன் இல்லாமல் செல்வதே இல்லை. மேலும், ரசிகர்கள் முதல் பிரபலங்கள் என பலரும் இவர்களுடைய திருமணம் குறித்து எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். அதோடு இவர்களின் திருமணம் பற்றி தான் எதாவது ஒரு புரளியை சோசியல் மீடியாவில் கிளப்பி கொண்டு வருகிறார்கள். இருந்தும் இவர்கள் இருவரும் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். தற்போது விக்னேஷ் சிவன் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கியுள்ளார்.

காத்துவாக்குல ரெண்டு காதல்:

இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படத்தின் டிரைலர், பாடல் எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. மேலும், இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தல தோனி நடிக்க இருப்பதாக உள்ள தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. விக்னேஷ் சிவன் தல தோனியின் தீவிர ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-

இன்ஸ்டாவில் விக்னேஷ் சிவன் பதிவிட்ட பதிவு;

சமீபத்தில் விக்னேஷ் சிவன் தல தோனியை நேரில் சந்தித்து உள்ளார். அப்போது தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு கூறியிருப்பது, எனது முன்மாதிரியான அவரை சந்தித்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. எனது இயக்கத்தில் தோனி நடிப்பதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார். இப்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி நடிக்க இருப்பதை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் உற்சாகத்தில் உள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் இது யாரும் எதிர்பாராத ஒரு இன்ப அதிர்ச்சி என்று சொல்லலாம்.

தோனி-விக்னேஷ் சிவன் இயக்கும் விளம்பரம்:

சமீபத்தில் விஜய், தோனி சந்திப்பின் நெல்சன் உடனிருந்த புகைப்படத்தை பகிர்ந்து தனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் விக்னேஷ் சிவன் பதிவிட்டிருந்தார். அதை விட தற்போது ஒரு அருமையான வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்துள்ளது. அது வேற ஒண்ணும் இல்லைங்க, இந்த ஆண்டு பிரமாண்டமாக நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் சென்னை அணிக்காண விளம்பரப் படத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவனுக்கு கிடைத்திருக்கிறது. தோனியும், விக்னேஷ் சிவனும் சந்திக்கும்போது பூங்கொத்து கொடுத்து வரவேற்று இருக்கின்றனர். சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காண விளம்பரத்தை விக்னேஷ் சிவன் இயக்கும் வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

Advertisement