‘நானும் ரௌடி தான்’ போது கடற்கரையில் நயனுடன் எடுத்த அறிய வீடியோவை வெளியிட்ட விக்னேஷ் சிவன்.

0
1121
nayanthara

தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகை நயன்தாரா. இன்றைய கனவுக்கன்னியாக ரசிகர்கள் மனதில் இடம் பெற்றவர். தற்போது இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவே பொறாமை படும் காதல் ஜோடியாக இருந்து வருகிறார்கள். ஆனால், சமீபத்தில் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் காதலில் விரிசல் ஏற்பட்டதாகவும் இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் என்றும் பல்வேறு புதிய வதந்திகள் கிளம்பியது.

ஆனால் அடுத்த சில நாளே நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் விக்னேஷ் சிவன். தற்போது இவர்கள் இருவரும் எப்போது திருமணம் செய்து கொள்வார்கள் என்று பலரும் எதிர் பார்த்து வருகின்றனர்.ஆனால், இருவருமே திருமணத்தை பற்றி வாயை திறக்காமல் தான் இருந்து வருகிறார்கள்.

- Advertisement -

இருப்பினும் அடிக்கடி வெளிநாட்டு பயணம் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அவ்வளவு ஏன் தற்போது கொரோனா வைரஸால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் கூட இவர்கள் இருவரும் இணைந்து ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டு வந்தனர். அதிலும், விக்னேஷ் சிவன் தான் இதுபோன்ற புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம்.

இந்த நிலையில் விக்னேஷ் சிவன், நானும் ரவுடி தான் படத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். போடா போடி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான விக்னேஷ் சிவன் இயக்கிய இரண்டாவது படம் நானும் ரௌடி தான். நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் காதல் ‘நானும் ரௌடி தான் ‘ படத்தின் போது தான் பற்றிக்கொண்டது என்று கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சமீபத்தில் விக்னேஷ் சிவன், நானும் ரௌடி தான் படப்பிடிப்பில் பாண்டிச்சேரியில் நடைபெற்ற போது எடுத்த வீடியோ என்று குறிப்பிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் நயன்தாராவிற்கு எதோ வசனத்தை சொல்லித்தருகிறார் விக்னேஷ் சிவன், இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Advertisement