IPL போட்டியில் பாதுகாவலராக இருந்த போது தோனியுடன் எடுத்த புகைப்படத்தை தோனிக்கே காண்பித்துள்ள விக்னேஷ் சிவன்.

0
551
vignesh
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். இவர் இயக்கத்தில் வெளிவந்த போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களெல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்று உள்ளது. இதனிடையே விக்னேஷ் சிவன், நயனை காதலித்து வருவது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. இவர்களின் திருமணத்திற்காக ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் காத்து கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி நடிக்க இருக்கும் தகவல் ஏற்கனவே வெளிவந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

-விளம்பரம்-

அது வேற எதுவும் இல்லைங்க, இந்த ஆண்டு பிரமாண்டமாக நடைபெற உள்ள ஐபிஎல் போட்டிகள் ஏப்ரல் மாதத்தில் தொடங்க உள்ளது. அதில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காண விளம்பரத்தை இயக்கும் வாய்ப்பு விக்னேஷ் சிவன் கிடைத்து உள்ளது. இது தொடர்பாக தோனியும், விக்னேஷ் சிவனும் சந்திக்கும்போது பூங்கொத்து கொடுத்து வரவேற்று இருக்கின்றனர். மேலும், விக்னேஷ் சிவன், தோனியை நேரில் சந்தித்தபோது தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டு கூறியிருப்பது, என்னுடைய ரோல் மாடல். என்னுடைய ஹீரோ. என்னுடைய நம்பிக்கை நட்சத்திரம். இவருடன் இந்த புகைப்படத்திற்கு என்ன கேப்சன் போட்டாலும் அது அவரை நான் சந்தித்த அந்த நொடியில் எனக்கு இருந்த உணர்வை முழுமையாக வெளிப்படுத்தாது.

- Advertisement -

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தோனி :

வாழ்க்கை மிகவும் அழகானது என்பதை நான் உணர்ந்த தருணம் அது. இப்படியான ஒரு தருணத்தை உருவாக்கி கொடுத்தமைக்காக இந்த காலத்துக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். நான் அவரை இன்று சந்திக்கையில் ஒரு நல்ல கதையுடன் சந்தித்தேன். விரைவில் அவருக்கு ஆக்சன் சொல்லி அவரை இயக்கும் நாள் வரும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்படி விக்னேஷ் பதிவிட்டு இருக்கும் பதிவிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக் கூறி உள்ளார்கள். மேலும், இது விளம்பரத்தோடு மட்டும் அமையுமா? இல்லை காதல் திரைப்படமாக மாறுமா? என்று கேள்வி எழுப்பினார்கள். அதற்கு விளக்கம் கொடுத்து சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார் விக்னேஷ் சிவன். அதில் அவர் கூறியிருப்பது,

தோனியுடன் அம்மா எடுத்த புகைப்படம் :

பல வருடங்களுக்கு முன் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க தமிழகம் வரும் கிரிக்கெட் வீரர்களுக்கான பாதுகாப்பு காவலர்களுக்கு என் அம்மா தான் இன்சார்ஜாக இருந்தார். என் அம்மா அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்ததார். அது சாத்தியமாக இருந்தது. அவர் தான் எல்லோருக்கும் இன்சார்ஜ் என்பதால் போட்டிக்கு வரும் எல்லா வீரர்களையும் இறுதியில் சந்திக்கும் வாய்ப்பு அவருக்கு இருந்தது. அதனால் கிரிக்கெட் வீரர்கள் தங்கும் ஹோட்டலுக்குப் அம்மாவுடன் நானும் போய் விடுவேன். ஒரு ஓரமாக நின்று கொண்டு அங்கிருந்து தோனியை பார்ப்பேன். அப்போது இருந்தே தோனியை எனக்கு ரொம்ப பிடிக்கும். என் வாழ்நாள் முழுவதும் தோனியை நான் பின் தொடர்ந்தேன். அந்த வகையில் இன்று வரை வெகு தூரத்தில் இருந்தபடியே தோனியை பார்த்து வாழ்க்கையை கற்றுக் கொள்ளும் மாணவனாகவே நான் உள்ளேன்.

-விளம்பரம்-

தோனி குறித்து நெகிழ்ச்சி :

நான் படம் இயக்க வந்த பின்னர் சூட்டிங் தொடங்கிய முதல் படம் தோல்வி, வெற்றி பெற்ற தருணங்கள் என பல தருணங்களை நான் கடந்து வந்து இருக்கிறேன். அப்போதெல்லாம் இந்த தருணத்தில் தோனி இருந்திருந்தால் அவர் எப்படி ரியாக்ட் செய்து இருப்பார் என்று யோசித்துப் பார்த்து அதையே தான் நானும் என் வாழ்க்கையில் செய்வேன். தோனியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட தலைமை பண்பு தான் எனக்கு என் பணியில் உபயோகமாக இருக்கிறது. சிறு வயதில் அவருடன் ஒரு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றெல்லாம் ஏங்கி இருந்தேன். ஆனால், எனக்கு அந்த வாய்ப்பு அமையவில்லை. அதனால் தோனியை நேரில் பார்ப்பது என்பது என் வாழ்நாளின் மிகப் பெரிய ஆசை, கனவாக இருந்தது. வாழ்நாளில் ஒரே ஒரு புகைப்படம் ஆவது அவருடன் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்த தருணத்தில் எனக்கு அமைந்திருப்பது மிகப்பெரிய ஆச்சரியம், அற்புதம் என்று சொல்லலாம். என் வாழ்க்கையில் இன்ஸ்பிரேஷனாக உள்ளவரையே வைத்து இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சிஎஸ்கே அணிக்காக தயாரிக்கப்படும் ஒரு சின்ன வீடியோவை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. அவரிடம் ஒரு இயக்குனராக 36 முறை ஆக்சன் சொல்லியிருக்கிறேன். ஒவ்வொரு முறை ஆக்சன் சொல்லும்போதும் கடவுளுக்கு நன்றி சொல்லியபடியே இருந்தேன். சின்ன பையனை போல எத்தனை முறை ஆக்சன் சொன்னேன் என்று கூட நான் எண்ணி வைத்தேன். பிரேக் நேரத்தில் என் அம்மா அவருடன் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை அவரிடம் காண்பித்தேன். அவர் மீண்டும் என் அம்மாவை சந்தித்தார். விடா முயற்சி செய்து உண்மையாக உழைத்தால் நிச்சயமாக பலன் கிடைக்கும். தோணி போன்ற ஒரு இனிமையான அன்பான ஒருவருடன் நானும் இணைந்து பணியாற்றி உள்ளேன் என்பதை என் வாழ்நாளில் நான் மறக்கவே முடியாத ஒரு விஷயம் என்று சந்தோஷத்துடன் பதிவிட்டிருக்கிறார்.

Advertisement