லோகேஷ் கிட்ட இருந்து கத்துக்கோங்க – Negative விமர்சனங்கள் குறித்து பதிவிட்ட விக்கியை வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

0
435
vigneshshivan
- Advertisement -

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கு வரும் நெகடிவ் விமர்சனங்கள் குறித்து விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ள பதிவு கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் சில தினங்களுக்கு முன் வெளியாகி இருக்கிறது. நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகி இருக்கும் படம் காத்துவாக்குல 2 காதல்.இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

- Advertisement -

காத்துவாக்குல ரெண்டு காதல் படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி- ராம்போ, சமந்தா – கதீஜா, நயன்தாரா- கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள். படத்தில் விஜய் சேதுபதி அதிஷ்டம் இல்லாதவராக இருக்கிறார். எது வேண்டும் என்று நினைத்தாலும் அது அவரை விட்டு செல்கிறது. இந்த நிலையில் இவருடைய வாழ்க்கையில் சமந்தா, நயன்தாரா இருவரும் வருகிறார்கள். இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா?

நெகட்டிவ் விமர்சனங்கள் :

விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் வேற என்ன மேஜிக் நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனமே பெற்று வருகிறது. இந்த படத்திற்கு பல விமர்சகர்களும் சுமாரான விமர்சனங்களை கொடுத்து வருகிறார்கள். அதிலும் ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பற்றி நாங்கள் சொல்லியா தெரிய வேண்டும்.

-விளம்பரம்-

மாறனின் விமர்சனம் :

படமே எடுக்க தெரியாதவர்களிடம் கதையை கொடுத்தால் கூட ஒரு மினிமம் கியாரண்டி உடன் கதையை எடுத்து இருப்பார். ஆனால், முதல் பாகத்தை ஏதோ பார்க்கலாம். இரண்டாம் பாகத்தின் ஸ்கிரிப்ட்டை தொலைத்து விட்டார்களா? என்று தெரியவில்லை. இந்த படம் ரொமான்ஸ், காமெடி என்று சொல்கிறார்கள், ஆனால் படத்தில் ரொமான்ஸும் இல்லை, சொல்லிக்கிற அளவுக்கு காமெடியும் இல்லை என்று கூறி இருந்தார்.

விக்னேஷ் சிவன் போட்ட பதிவு :

பெரும்பான்மையான பொது மக்களின் ரசனைகளிலிருந்து தனித்த ஒரு சில சினிமா விமர்சகர்களின் கூற்றுகளை பொய்யாக்கி திரையரங்குகளை திருவிழாவாக மாற்றி வரும் தமிழ் மக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். மக்களின் பேவரைட் காத்து வாக்குல ரெண்டு காதல். அருகில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று உணருங்கள், நம்புங்கள் என்று பதிவிட்டு இருக்கிறார். விக்னேஷ் சிவனின் இந்த பதிவை பார்த்த பலர் படம் சுமார் தான், விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று கூறி வருகின்றனர்.

4 பேருக்கு புடிக்கலனா தோல்வி படமா :

அதே போல விக்னேஷ் சிவனின் பதிவில் கடைசியில் குறிப்பிட்டு இருக்கும் ‘அருகில் உள்ள தியேட்டர்களுக்கு சென்று உணருங்கள், நம்புங்கள்’ என்பதை குறிப்பிட்டு ‘நல்லா இருந்தா நாங்களே பாப்போம் அப்புறம் ஏன் இப்படி கெஞ்சுரீங்க’ விமர்சங்களை ஏற்றுக்கொள்வது எப்படினு லோகேஷ் கிட்ட கத்துக்கோங்க என்று கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், விமர்சகர் ஒருவர் ‘Internetல் 4 பேருக்கு புடிக்கலனா தோல்வி படமா ‘ என்று பதிவிட்டு இருப்பதை விக்னேஷ் சிவன் ரீ – ட்வீட் செய்துள்ளார்.

Advertisement