ஜோதிகா, ஸ்னேகா எல்லாம் எப்படி இருக்காங்க, என்னதான் நீ லேடி சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் இதெல்லாம் அருவருப்பா இல்ல – விக்னேஷ் சிவன் பெரியப்பா ஆவேசம்.

0
196
vignesh
- Advertisement -

சமீபத்தில் விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் இரட்டை குழந்தைகள் பிறந்து இருப்பதாக அறிவித்து இருந்தனர். இப்படி ஒரு நிலையில் விக்னேஷ் சிவனின் பெரியப்பா, இது குறித்து பேட்டி அளித்துள்ளார். விக்னேஷ் சிவனின் பெரியப்பா நயன் – விக்கி திருமணம் ஆன போதே பேட்டி கொடுத்து இருந்தார். அதில் தங்களை விக்னேஷ் சிவன் திருமணத்திற்கு அழைக்கவில்லை என்றும் அவன் வீட்டிற்கு வந்தால் நான் அழைத்து விருந்து வைப்பேன் என்றும் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்ற விக்கி நயன் குறித்து அவர் பேட்டியில் கூறியதாவது : –

-விளம்பரம்-

அவர்கள் கல்யாணத்தை முறைப்படி நடத்தவே இல்லை எங்கள் சமூகத்தில் இப்படி எல்லாம் ஆடை அணிந்து திருமணம் செய்துகொள்ளமாட்டார்கள். அவனுக்கு தான் ஒன்றும் தெரியாது பெரியவர்களுக்கு கூடவா ஒன்றும் தெரியாது. அவனுக்கு திருமணம் ஆன நேரமே சரியில்லை. சரியான குளிகையில் தான் திருமணம் பண்ணான். அதனால் தான் திருமணம் முடிந்த கொஞ்ச நாளில் திருப்பதியில் ஒரு சர்ச்சையில் சிக்கினான்.

- Advertisement -

இது சட்டப்படி குற்றம் :

தற்போது இப்படி ஒரு பிரச்சனை. அவனுக்கு குழந்தை பிறந்து இருப்பது சந்தோசம் தான். ஆனால், திருமணம் ஆன நாலு மாதத்தில் இப்படி பண்ணி இருக்கிறான் இது ஒரு சுத்தமான குற்றம். பணம் இருக்கிறது என்று என்ன வேனா பண்ணலாம்னு இருக்காங்க. எங்களால வெளிய போக முடியல யார பார்த்தாலும் இத பத்தி தான் கேக்குறாங்க. அந்த பொண்ணு என்னதான் லேடி சூப்பர் ஸ்டாரா இருந்தாலும் அந்த பொண்ணு பண்றது எல்லாம் நல்லா இல்ல.

அருவருப்பாக இருக்கிறது :

திருமணத்திற்கு முன்னாடி நீங்கள் காதலர்கள் அதனால் என்னென்னமோ போட்டோ போட்டீர்கள் பரவாயில்லை ஆனால் திருமணத்திற்கு பின்னரும் எல்லா இடத்திற்கும் போய் தனிப்பட்ட புகைப்படங்களை எல்லாம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் பீச்சில் தனிமையில் இருந்த புகைப்படங்களை எல்லாம் பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. ஜோதிகா சினேகா எல்லாம் திருமணத்திற்கு பின்னர் எப்படி ஒரு குடும்பமாக இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

பணம் இருக்குன்னு பண்றாங்க :

இதெல்லாம் அவர்களுக்கு தெரியாதா? காசு இருக்கிறது என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நினைப்பில் தான் இருக்கிறார்கள். மேலும், இவர்கள் திருமணத்திற்கு பல மாதங்களுக்கு முன்னரே இந்த நாடகத் தாய் பற்றி முடிவு செய்து இருக்கிறார்கள் அதனால் தான் திருமணமான நான்கு மாதத்தில் குழந்தை பிறந்து இருக்கிறது இது சட்டப்படி குற்றம். திருமணம் ஆகி 5 ஆண்டுகள் குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் தான் இப்படி பெற்றுக் கொள்வார்கள்.

தங்கள் இஷ்டத்திற்கு செய்கிறார்கள் :

அதிலும், பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ குழந்தை பெற்றுக் கொள்ளும் தகுதி இல்லாமல் இருந்து பின்னர் மருத்துவர் சான்றிதழை பெற்று தான் இப்படி எல்லாம் செய்வார்கள். தத்தெடுப்பதர்க்கு கூட அவ்வளவு கட்டுப்பாடுகள் இருக்கிறது. ஆனால், பணம் இருக்கிறது என்று இவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு செய்கிறார்கள். சினிமாவில் இருந்தாலே வானளாவியா அறிவு இருக்கிறதாக நினைத்து பேசுகிறார்கள்.

Advertisement