‘இவன் எப்படி டா நயன்தாராவ கரெக்ட் பண்ணான்’ நயன்தாராவிற்கு விக்னேஷ் சிவன் போட்ட கேப்ஷன். கடுப்பான ரசிகர்கள்.

0
85712
vignesh
- Advertisement -

கொரோனா வைரஸ் குறித்து தினமும் கேட்கும் செய்திகள் நமக்கு அதிகப்படியான கவலையும்,பயத்தையும் ஏற்படுத்துகிறது. கொரோனா வைரஸினால் உலகமே என்ன செய்வது என்று புரியாமல் ஸ்தம்பித்து போய் உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றின் எண்ணிக்கை சில தினங்களாக இரு மடங்காக அதிகரித்து உள்ளது. இதுவரை இந்தியாவில் கொரோனாவினால் 4067 பேர் பாதிக்கப்பட்டும், 109 பேர் பலியாகியும் உள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/B-mxVNQhvUk/

மருத்துவர்கள், நர்ஸ்கள், காவல்துறை, அரசாங்கம் என பல பேர் தங்கள் உயிரை பணய வைத்து மக்களை காத்து வருகின்றனர். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால் அனைத்து விதமான படப்பிடிப்பு வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள்.

இதையும் பாருங்க : என்ன சிங்கப்பெண்ணே இதெல்லாம். பிகில் நடிகையின் கிளாமரை பார்த்து அசந்து போன நெட்டிசன்கள்.

- Advertisement -

மேலும், நாட்டின் பிரதமர் மோடி, அடிக்கடி மக்களிடம் உரையாற்றி கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வீடியோ மூலம் மக்களிடம் பேசிய மோடி, ஏப்ரல் 5ம் தேதி, அதாவது நேற்று இரவு 9 மணி முதல் 9 நிமிடங்கள் மின் விளக்குகளை அணைத்துவிட்டு , அகல் விளக்குகள் மற்றும் மெழுகுவர்த்தியை ஏற்றுமாறும், மொபைல் டார்ச் மூலம் கொரோனாவிற்கு எதிரான வெளிச்சத்தை காட்டுங்கள். உங்கள் வீட்டு வாசலில் இருந்தோ பால்கனியில் இருந்தவாறு இதை செய்யுங்கள்.

-விளம்பரம்-

தெருவில் கூட்டமாக சேர வேண்டாம். வீட்டில் ஒளியேற்றும் போது சமூக விளைவுகளை கடைபிடியுங்கள். நாம் ஊரடங்கில் தான் இருக்கிறோமே தவிர, தனியாக இல்லை. ஒற்றுமையின் வலிமையை மக்கள் உணர வேண்டும் என்றும் கூறி இருந்தார். இதையடுத்து நாடு முழுவதும் உள்ள மக்கள் நேற்று 9 மணிக்கு 9 நிமிடங்கள் தீபம் ஏற்றி வைத்து மோடியின் வேண்டுகோளை நிறைவேற்றினர்.

https://twitter.com/cuttuftbandana/status/1246840846822993920

மேலும், பொதுமக்களை போல பல்வேறு சினிமா பிரபலங்களும் நேற்று விளக்கேற்றி வைத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவேற்றினர்.இந்த நிலையில் பிரபல இயக்குனரும் நயன்தாராவின் இந்நாள் காதலருமான விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா விளக்கேந்தி இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டிருந்தார். மேலும், அதை இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸாகவும் வைத்தார்.

இதையும் பாருங்க : ஜாக்கிங் சென்ற நடிகையை கடித்து குதறிய தெரு நாய்கள். மருத்துவமனையில் சேர்த்த அக்கம் பக்கத்தினர்.

https://twitter.com/V_I_S____/status/1246852161314545664

அதில், 9 to 9:09 for 9 mins with 9 அதாவது 9 மணி ம் நிமிடங்கள் 9னுடன் என்று பதிவிட்டிருந்தார். இதனை கண்ட ரசிகர்கள் சிலர் இதற்கு இப்படி ஒரு கேப்ஷன் தேவையா என்றும், இவன் எப்படி டா நயன்தாரா கரெக்ட் பண்ணான் என்றெல்லாம் கமன்ட் செய்து வருகின்றனர். மேலும், பலரும் விக்னேஷ் சிவனை கழுவி ஊற்றி வருகின்றனர்.


Advertisement