கிண்டல் செய்த சஞ்சய் மஞ்சுரேக்கரை கிழித்தெடுத்த விக்னேஷ் சிவன்.!

0
13666
Vignesh

உலக கோப்பை தொடரில் இருந்து இந்திய அணி நேற்று வெளியேறியது. தொடர் வெற்றிகளை ருசித்து வந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணியுடன் மோதியது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்து பலரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது.

இந்த உலக கோப்பை தொடர் ஆரம்பித்த நாள் முதலே முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சஞ்சய் மஞ்சுரேக்கர் எதிர்மறையான கருத்துக்களை கூறி சர்ச்சைகளில் சிக்கிவந்தார். அதிலும் குறிப்பாக தோனி மற்றும் ஜடேஜாவை மிகவும் மோசமாக விமர்சித்தார். நேற்று நடந்த போட்டியில் கூட ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை நக்கலாக பாராட்டி இருந்தார்.

இதையும் பாருங்க : ஷங்கரின் கோபம்.! இனி வடிவேலு சினிமாவில் நடிக்கவே முடியாது.! ஷாக்கிங் ரிப்போர்ட்.!

- Advertisement -

இந்த நிலையில் இந்திய அணியின் தோல்வி குறித்து பேசியுள்ளார் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன், நீங்கள் ஜெயித்துவிட்டீர்கள் சஞ்சய் மஞ்சுரேக்கர். ஆனால் உண்மையில் ஜெயித்தது நீங்கள் அல்ல உங்களுடைய எதிர்மறை சிந்தனை, உங்கள் பிரார்த்தனைகள் கடைசியில் வென்றுவிட்டன. நியூஸிலாந்து அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இப்போது நீங்கள்தான் கோப்பையை வெல்ல வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

ஏனெனில் நீங்கள் தோற்கடித்தது உலகின் மிகச் சிறந்த அணியை. உலகக் கோப்பை தொடர்ந்து முழுவதுமே சிறப்பான பொழுதுபோக்கைப் படைத்த இந்திய அணிக்கு நன்றி. தோனி மீண்டும் கோப்பையை கையில் ஏந்த வேண்டும் என நினைத்தோம். ஆனாலும் பரவாயில்லை தோனி, நீங்கள் எங்களுக்காக நிறைய செய்துவிட்டீர்கள். உங்களை நினைத்து அசைபோட நிறைய நல்ல தருணங்கள் இருக்கின்றன என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement