தமிழ் சினிமா உலகில் தற்போது ஹாட் அண்ட் குயூட் காதல் ஜோடியாக வலம் வருபவர்கள் நம்ம நயன்தாரா-விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் செய்யும் காதல் லூட்டிகளுக்கு அளவே இல்லை. லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிகையாக விளங்கி வருகிறார் நடிகை நயன்தாரா. தற்போது நடிகை நயன் அவர்கள் பிசியாக பல மொழி படங்களில் நடித்து வருகிறார். ஒரு வருடத்துக்கு முன்பே இவர்களுக்கு திருமணம் ஆக போகிறது என்ற செய்திகள் சோசியல் மீடியாவில் வந்தது. ஆனால், இவர்கள் இன்னும் காதல் ஜோடிகளாகவே வலம் வருகிறார்கள்.
அதோடு தொடர்ச்சியாக வரும் பட வாய்ப்புகள் காரணமாக தான் நயன் தன்னுடைய திருமணத்தை தள்ளி வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், நடிகை நயன்தாரா அவர்கள் எங்கு சென்றாலும் தனது காதலர் விக்னேஷ் சிவனுடன் தான் செல்கிறார். இவ்வளவு பிஸியான நேரங்களிலும் நடிகை நயன் அவர்கள் அடிக்கடி வெளிநாட்டிற்கு தன் காதலன் விக்கி உடன் பறந்து செல்கிறார். இந்த ஜோடிகள் அவ்வப்போது தங்களுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு தங்களது காதலை ரசிகர்களுக்கு அப்டேட் செய்து விடுகின்றனர்.
இந்நிலையில் இன்று காதலர் தினத்தன்று நடிகை நயன்தாரா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் க்யூட் லவ் ஸ்டோரி என்று பதிவிட்டு தன் காதலன் விக்னேஷ் உடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். அதே போல் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். அதோடு நாங்கள் காதலிக்கத் தொடங்கி 5 வருடங்கள் ஆகி உள்ளது. காற்றுவாக்கில் ஐந்து வருடம் எப்படி போனதே தெரியவில்லை.
இந்த ஐந்து வருடத்தில் நிறைய அழகான ஞாபகங்கள் இருக்கிறது என்று பதிவிட்டு உள்ளார். இப்படி இவர்கள் இருவரும் மாற்றி மாற்றி சோசியல் மீடியாவில் தங்களுடைய காதலை வெளிப்படுத்தி வருகிறார்கள். இவர்கள் இருவரும் பதிவிட்ட கருத்துகளை பார்த்த ரசிகர்கள் பயங்கர குஷியாகி உள்ளார்கள். மேலும், இவர்கள் இருவரின் புகைப்படத்தையும், கருத்தையும் ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்தும், வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.