அவங்கள விட நீங்க ஹீரோயின் பின்னாடி சுத்தும் போது நான் நல்லா ஹெல்ப் பண்ணுவேன் – Skவுடன் நடிப்பது குறித்து கேலியாக பேசிய விஜய் சேதுபதி.

0
557
vijaysethupathi
- Advertisement -

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரமாக அறிமுகமாகி தன்னுடைய நடிப்பின் மூலம் கதாநாயகனாக வளர்ந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகராக சினிமாவில் வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்நிலையில் இவர் நடித்த “டிஎஸ்பி” படம் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது, இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ், அனுகீர்த்தி, சாந்தினி, பிக் பாஸ் பிரபலம் ஷிவானி போன்றவர்கள் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படமானது நேற்று 2ஆம் முதல் தேதி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் விஜய் சேதுபதி தற்போது படத்திதை ப்ரமோஷன் செய்வதில் மும்முரமாக பிரபல சேனல்களில் பேட்டியளித்து வருகின்றார். இப்படியிருக்கும் போது நேற்று பிரபல யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தார். அந்த பேட்டியில் விஜய் டிவியின் பிரபல மிமிக்ரி கலைஞர்களான அசார் மற்றும் டிஎஸ்கே அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தனர். டிஎஸ்பி படத்தை பற்றி பேசிக்கொண்டே கடந்த காலங்களில் சிவகார்த்திகேயன் விஜய் சேதுபதியை போல மிமிக்ரி செய்த வீடியோ ஒன்றை அவரிடம் காட்டினார்கள். அந்த வீடியோவில் விஜய் சேதுபதியின் ” குமுதா ஹாப்பி அண்ணாச்சி” என்ற வாக்கியங்களும் இடம்பெற்றிருந்தன. இதனை பார்த்த ரசிகர்கள் கரகோசங்களை எழுப்பினர்.

- Advertisement -

இதற்க்கு பிறகு பேசிய அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அசார் நடிகர் சிவகார்த்திகேயன் போலவே மிமிக்ரி செய்ய தொடங்கினார். தொடக்கத்தில் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் ஏன் நாம் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்கக்கூடாது? என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த விஜய் சேதுபதி நான் சிவகார்த்திகேயனுடன் நடிக்க தயார் என்று ஊறினர். மேலும் எனக்கு காமெடி நன்றாக வரும் எனனே நான் சிவகார்த்திகேயன் நண்பர்கள் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

அதற்கு பிறகும் பேசிய விஜய் சேதுபதி `சிவகார்த்திகேயன் படத்தில் காமெடி நடிகர்களாக நடிக்கும் சூரி அல்லது சதீஸ் இருப்பார்கள் இல்லையா? எனவே அவர்களது கதாபத்திரத்தில் நடிக்கிறேன். என்ன சூரி தான் என் மீது வருத்தப்படுவார் நான் அவருடன் பேசிக்கொள்கிறேன் என்றார். மேலும் சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகிகள் பின்னல் செல்லும் போது நான் அதற்கு நண்பனாக உதவி செய்வேன்`சிவகார்த்திகேயனுக்கும் என்னக்கு இடையில் இருப்பது ஆரோக்கியமான போட்டிதான் என்று பதிலளித்தார் விஜய் சேதுபதி.

-விளம்பரம்-

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள் பலவற்றில் ரொமான்ஸ் மற்றும் ஸ்டாக்கிங்காக பலமுறை விமர்ச்சிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே மற்றும் ரெமோ போன்ற பாடங்களில் இவை அதிகமாகவே இருந்தது என்று சொல்லலாம். தற்போது சிவகார்த்திகேயன் டாக்டர், ஹிரோ போன்ற படத்தின் கதைக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயன் கதாநாயகிகளை துரத்துவதை கேலி செய்யுமாறு பேசியது தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தற்போது விஜய் சேதுபதி மைக்கில், மெரி கிரிஸ்துமஸ், விடுதலை, காந்தி டாக்கீஸ், மும்பை கார், ஜவான் போன்ற திரைப்படங்களில் வரும் வருடங்களில் தொடர்ந்து நடக்கவுள்ளார். இதே நேரத்தில் சிவகார்த்திகேயன் அயலாம் மற்றும் மாவீரன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்த பேட்டியில் விஜய் சேதுபதி தான் சிவகார்திகேயனுடன் இணைந்து நடிக்க தயார் என்று கூறியிருப்பது. இவர்கள் இருவரையும் திரையில் ஒன்றாக பார்க்கலாம் என்ற ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய் சேதுபதி சிவகார்த்திகேயனை பற்றி பேசிய விடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Advertisement