விஜய்யின் 103 வயது பாட்டி – நேரில் சென்று ஆசிர்வாதம் வாங்கி இருக்கும் SACயின் உருக்கமான பதிவு.

0
645
- Advertisement -

இயக்குனர், தயாரிப்பாளர், எழுத்தாளர், நடிகர் என பன்முகங்களை கொண்டவர் எஸ்.ஏ சந்திரசேகர். தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் தொடக்க காலங்களில் தன்னுடைய அப்பாவான எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கத்தில் தான் பெரும்பாலான திரைப்படங்களை நடித்திருந்தார். நடிகர் விஜய் 1984ஆம் ஆண்டு “வெற்றி” என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாலாலும் அவரது தந்தை எஸ்.ஏ சந்திரசேகர் அதற்க்கு முன்னரே “சட்டம் ஒரு இருட்டறை” என்ற திரைப்படத்தை மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகிவிட்டார்.

-விளம்பரம்-

முதல் திரைப்படத்துக்கு பிறகு விஜயகாந்தை வைத்து இயக்கிய படங்கள் வெற்றியை தரவே தொடாந்து அவரை வைத்தே பல திரைப்படங்களை இயக்கினார். மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் 70க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களை இயக்கிய எஸ்.ஏ சந்திரசேகர் 1984ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான “வெற்றி” என்ற திரைபடத்தில் தன்னுடைய மகனான விஜய்யை குழந்தை நட்சத்திரமாக அப்படத்தில் அறிமுகம் செய்து வைத்தார்.

- Advertisement -

பின்னர் “நாளைய தீர்ப்பு” என்ற திரைப்படத்தின் மூலம் அவரது மகன் விஜய்யை கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தார். அதற்கு பின்பு அவர் மகனை விஜய் அவர்களை வைத்தே தொடர்ந்து செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு, மாண்புமிகு மாணவன் என பல திரைப்படங்களை இயக்கி வந்தார். 1945ஆன் ஆண்டு பிறந்த எஸ்.எ.சி தன்னுடைய 77வயதிலும் இயக்குனராக மட்டுமில்லாமல் நடிகராக நய்யப்புடை, ட்ராபிக் ராமசாமி, ஆருத்ரா போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

மேலும் விஜய் மக்கள் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவராகவும் எஸ்.ஏ சந்திரசேகர் இருந்து வருகிறார். திரையுலகில் தன்னை ஒரு முன்னணி இயக்குனர்களில் ஒருவராக நிலை நிறுத்திக்கொண்டு இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் தற்போது சினிமாவுலகில் ஏற்படும் பிரச்ச்னைகளையும், தன்னுடைய மகனான விஜய் நடிக்கும் திரைபடங்களை பற்றி பேசுவதென இருக்கும் இவரது கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

-விளம்பரம்-

இந்நிலையில் இவர் தன்னுடைய சித்தியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருந்தார். மேலும் அவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் அந்த புகைப்படத்தை வெளியிட்டு அதில் “மதுரையில் இருக்கும் என்னுடைய சித்திக்கு 103 வயதாகிறது இருந்தாலும் அழகாக அமர்ந்து அன்போடு என்னை ஆசீர்வதிக்கிறார் என்று பதிவிட்டிருந்தார். இந்நிலையில் அவர் பதிவிட்ட புகைப்படமானது விஜய் ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisement