இன்றோடு 25 ஆண்டை நிறைவு செய்த ஒன்ஸ் மோர், இளையராஜாவால் தோல்வியடைந்த காரணம். SAC சொன்ன வீடியோ இதோ.

0
615
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக கலக்கிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது விஜய் அவர்கள் பீஸ்ட் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸ்க்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டு இருக்கின்றனர். மேலும், சினிமா உலகில் ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்கள் தோல்வியுற்று இருக்கிறது. இருந்தும் தன்னுடைய விடாமுயற்சியாலும், கடின உழைப்பினாலும் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். ஆரம்பத்தில் இவர் நடித்த பல படங்களை இவருடைய தந்தை இயக்குனர் சந்திரசேகர் தான் இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடித்த 6வது படமாக ஒன்ஸ்மோர் அமைந்தது. 1997-ல் வெளியான இந்த திரைப்படம், காதல், காமெடி, சென்டிமென்ட் என அட்டகாசமாக உருவாக்கப்பட்டிருக்கும். 1997 கால கட்டத்தில் விஜய்க்கு லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர் ஆகியவை ஹாட்ரிக் வெற்றிப் படங்களாக அமைந்தன. சிவாஜி கணேசன், சரோஜா தேவி, விஜய் நடிப்பில் உருவான ஒன்ஸ்மோர் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

- Advertisement -

இதையும் பாருங்க : வரலாற்று கதை, 3D தொழில்நுட்பம், வித்தியாசமான கெட்டப் – விக்ரம், ரஞ்சித் படத்தின் கலக்கல் அப்டேட்.

25 ஆண்டை கடந்த படம் :

இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த படம் 100 நாட்கள் தாண்டி வெற்றி பெற்றதாக அறிவித்து இருந்தார்கள். இந்த நிலையில் இந்த படம் தோல்வியடைந்த படம் என்றும், இதற்கு காரணம் இளையராஜா என்றும் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியிருந்தார்.விஜய் நடித்த ஒன்ஸ்மோர் படம் ஒரு தோல்வியை தழுவிய படம். இதற்கு முழுக்க காரணம் இளையராஜா தான்.

-விளம்பரம்-

வைரலாகும் எஸ் ஏ சந்திரசேகர் வீடியோ:

நாங்கள் இந்த படத்தை ஒரு ஷார்ட் பிலிம் மாதிரி எடுக்க தான் நினைத்தோம். அதற்காக தான் நாங்கள் சிம்லாவிற்கு ஒரு 12 பேர் கொண்ட குழுவுடன் சென்றிருந்தோம். மேலும், ஒரு ஓட்டலில் தங்கியிருந்தோம். காலையில் எழுவோம் எங்களுக்கு பிடித்த இடங்களுக்கு செல்வோம்.என்ன தோணுதோ அதை காட்சியாக எடுத்தோம். அப்படியே சில நாட்கள் அங்கு தங்கி இருந்து எடுத்தோம். பின்பு அது நல்லபடியாக வந்தது.

இளையராஜா சொன்ன விஷயம் :

இதை ஒரு மணி நேரம் எடுக்கலாம் என்று தமிழ்நாட்டில் சில இடங்களில் காட்சிகள் எடுத்தபின் இதற்கு இசை அமைக்கலாம் என்று யோசித்து இளையராஜாவிடம் சென்றோம். அப்போது அவர் அதை பார்த்துவிட்டு இதை ஏன் நீங்கள் திரையில் வெளியிடக்கூடாது? இது அருமையாக இருக்கிறது என்று சொன்னார்.இப்படி அவருடைய தூண்டுதலின் படி தான் நாங்கள் இந்த படத்தை இரண்டு மணி நேரமாக ஆக்க பல காட்சிகளை புகுத்தினோம்.

ஒன்ஸ்மோர் படம் தோல்வி:

ஆனால், அது ஒரு மணி நேரம் வந்து இருந்தாலே நன்றாக இருந்து இருக்கும். ஆனால், இரண்டு மணி நேரம் எடுப்பதற்காக சில காட்சிகள் வைக்கப்பட்டது தான் படம் தோல்வியை தழுவியது என்று கூறி இருந்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 100 நாள் ஓடி வெற்றி விழாவை கண்ட இந்த படத்தை விஜய்யின் தந்தையே தோல்விப்படம் என்று கூறி இருப்பது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

Advertisement