வரலாற்று கதை, 3D தொழில்நுட்பம், வித்தியாசமான கெட்டப் – விக்ரம், ரஞ்சித் படத்தின் கலக்கல் அப்டேட்.

0
457
paranjith
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்கிறார் பா. ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

-விளம்பரம்-

இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அமோக வெற்றியை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் பல படங்களை தயாரித்தும் இருக்கிறார். சமீபத்தில் வெளிவந்த ரைட்டர் படத்தை இவர் தான் தயாரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

நட்சத்திரம் நகர்கிறது படம்:

தற்போது இயக்குனர் பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் நிறைவடைந்தது. இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமன் கதாநாயகனாக நடித்து இருக்கிறார். அவருக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை புகழ் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இவர்களுடன் படத்தில் அசோக் செல்வன் எனப் பலர் நடித்து இருக்கிறார்கள்.

நட்சத்திரம் நகர்கிறது படத்தின் அப்டேட்:

‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ படத்தின் இசையமைப்பாளர் டென்மா இந்த படத்திற்கு இசை அமைத்து இருக்கிறார். ஒளிப்பதிவாளராக கிஷோர் குமார் இந்த படத்தில் பணியாற்றி இருக்கின்றனர். கடந்த மே மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. ஆனால், இன்னும் இந்த படத்தை பற்றி எந்த அப்டேட்டும் வெளிவராமல் இருக்கிறது. ஆனால், வருகிற 6ம் தேதி நட்சத்திரம் நகர்கிறது படத்தின் அப்டேட் வெளியாகிறது.

-விளம்பரம்-

விக்ரம்-பா.ரஞ்சித் கூட்டணி:

இந்நிலையில் விக்ரம்-பா.ரஞ்சித் கூட்டணி குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. விக்ரம் நடிக்கும் படத்தின் கதை ரெடி. முழு ஸ்க்ரிப்டையும் விக்ரம் கேட்டு ஓகே சொன்னதால் படப்பிடிப்பு வேலையில் பா.ரஞ்சித் இறங்கி இருக்கிறார். 17ஆம் 18ஆம் நூற்றாண்டின் கதைக்களம் என்பதால் அந்த காலகட்டத்தை பிரதிபலிக்கும் இடங்களை பா ரஞ்சித் உதவியாளர்கள் தேடி கொண்டிருக்கின்றார்கள். கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு என பல இடங்களிலும் லோகேஷன் தேடிவருகின்றனர். தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார்? என ஓரளவு முடிவாகி இருக்கிறது.

படம் குறித்த பிற தகவல்கள் :

ஆனால், நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை. பெரிய பட்ஜெட்டில் படம் தயாராக உள்ளதால் நடிகர்களில் ஆச்சரியமான காம்பினேஷன் இருக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் வர இருக்கிறார். இந்த படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இதற்கு இடையில் நட்சத்திரம் நகர்கிறது படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டு வருகிறார்கள். கூடிய விரைவில் விக்ரம் படம் குறித்த தகவல் வெளியாகும்.

Advertisement