விஜய் 62ல் இது தான் விஜய்யின் கதாபாத்திரம் – கசிந்தது தகவல்

0
1821
Vijay 62

தளபதி விஜய் மற்றும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி என மெகா ஹிட் படங்கள் வெளிவந்துள்ள நிலையில். தற்போது அவர்கள் இருவரும் மீண்டும் கைகோர்த்துள்ளதால் தளபதி ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Thalapathy 62இந்த நிலையில் விஜய் 62 படத்திற்கான போட்டோஷூட் இன்று சென்னையில் உள்ள ஏ.வி.எம் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த போட்டோஷூட்டின் புகைப்படங்கள் எப்படியோ இணையத்தில் வெளியானது. புகை படம் மட்டும் அல்லாமல் இதன் வீடியோவும் வெளியாகி வைரலாகி உள்ளது.

இந்த போட்டோஷூட்டில் உள்ள புகைப்படங்களை உற்றுநோக்கினோமானால் அதில் தெள்ள தெளிவாக தெரிகிறது விஜய்யின் கதாபாத்திரம். முன்பு இந்த கூட்டணியில் வெளியான இரண்டு படங்களை போல அல்லாமல் இந்த படத்தில் விஜய் ஒரு மிகப்பெரிய பணக்காரராக நடிப்பது போல தெரிகிறது. அதோடு விஜய் காஸ்ட்லீ மொபைலில் எதையோ பார்ப்பது போல காட்சியும் போட்டோஷூட் வீடியோவில் உள்ளது. ஆகையால் இந்த படத்தில் விஜய் ஒரு பணக்காரராக நடிக்கவுள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படிக்கலாமே:
தளபதி 62 போட்டோஷூட் வீடியோ

என்னினும் படத்தின் பர்ஸ்ட் லுக் வந்த பிறகு ஓர் இரு விவரங்கள் நமக்கு இன்னும் தெளிவாக புரியும். அதுவரை காத்திருப்பிப்போம்.