விஜய் 62 படத்தில் விஜய் இந்த கட்சியை தாக்குகிறாரா..! அசத்தல் செய்தி.! புகைப்படம் உள்ளே ..!

0
700

நடிகர் விஜய் சில காலமாக அரசியில் குறித்த வசங்களை தனது படங்களில் பேசி வருகிறார்.சில நாட்களுக்கு முன்னர் பேட்டியளித்த விஜயின் பேச்சிலும் அரசியல் வருகை குறித்த அறிவிப்பு இருந்தது. அதில்”நான் அரசியலில் ஈடுபடுவது சாதாரணமான விஷயம் வில்லை, அதற்கான அடித்தளத்தை முதலில் அமைக்க வேண்டும். அதற்காக தான் என்னுடை ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றியுளேன்” என்று தெரிவித்திருந்தார்.

vijay-62

இந்நிலையில் தற்போது இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் “விஜய் 62 ” படத்தின் சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அரசியல் வாதிகளாக நடித்துள்ள ராதாரவி மற்றும் பழ.கருப்பையா ஆகியோர் “அ.இ.ம.மு.க “என்ற கட்சியை நடந்துகிறார்களாம்.

அந்த கட்சியை எதிர்த்து தான் விஜய் போராடுகிறாராம், இந்த கட்சியின் பெயர் தற்போதுள்ள “அ.இ.அ.தி.மு.க” கட்சியை தாக்குவது போல இருக்கின்றது. இந்த தகவல் சமீபத்தில் வெளியான “விஜய்62” படத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு சேட்டின் மூலம் அப்பட்டமாக தெரிகிறது. இதனால் நடிகர் விஜய் ஆளும் தமிழக அரசை இந்த படத்தில் எதிர்த்து பேசிக்கிறரோ என்று கேள்வி எழும்புகிறது.

vijay-62

ஏற்கனவே விஜய் படங்களில் அரசியல் ரீதியான வசனங்கள் வந்தால் அவரது படத்திற்கு பல பிரச்சனைகள் கிளம்பிவிடுகின்றனர். அதே போல தான் சமீபத்தில் வந்த விஜய்யின் “மெர்சல்” படமும் அரசியல் ரீதியாக பல பிரச்சனைகளை சந்தித்தது. இந்நிலையில் தற்போது நடித்து வரும் படத்தில் நடிகர் விஜய் நேரடியாகவே சில அரசியில் பிரமுகர்களை தாக்கியுள்ளது விஜய்க்கு என்ன பிரச்னையை தரப்போகிறது என்று பொறுத்திருந்து பார்போம்.