விஜய் 63 படத்திற்காக 16 பெண்கள் தேர்வு.! உறுதியானது விஜய்யின் கதாபாத்திரம்.!

0
1071
vijay-63
- Advertisement -

சர்கார் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லீ இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லீயுடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ளார் விஜய்.

-விளம்பரம்-

ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. படத்திற்க்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். மேலும், நீண்ட இடைவேளைக்கு பின்னர் காமெடி நடிகர் விவேக்கும் விஜயுடன் இந்த படத்தில் நடிக்கவிருக்கிறார்.

- Advertisement -

இந்த படம் விளையாட்டு சம்மந்தபட்ட கதையாக இருக்கும் என்று ஏற்கனவே சில தகவல்கள் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படத்திற்காக தனது உடலை மேலும் மெருகேற்றி வருகிறார் விஜய். இந்நிலையில் இந்த படம் பெண்கள் விளையாட்டு சம்மந்தபட்ட படமாக உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்காக 16 பெண்கள் இந்த படத்தில் தேர்வு செய்யபட்டுள்ளனர் .பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படவுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கவிருக்கிறார்.

-விளம்பரம்-
Advertisement