விஜய் 63 விடியோவை வெளியிட்ட ஏ ஜி எஸ் நிறுவனம்.! விஜய் எப்படி இருக்கார் பாருங்க.!

0
462
vijay63

மெர்சல் படத்தை தொடர்ந்து அட்லீ விஜய் கூட்டணியில் விஜய் 63 படம் உருவாக உள்ளது. தெறி,மெர்சல் படத்திற்கு பிறகு மூன்றாவது முறையாக இணைகிறது அட்லீ மற்றும் விஜய் கூட்டணி.

பிரமாண்ட பொருட்செலவில் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படம் பூஜையுடன்நேற்று (ஜனவரி 20)தொடங்கியது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இவர்களுடன் ஆனந்தராஜ், யோகிபாபு, டேனியல் பாலாஜி, கதிர், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தின் பூஜை நடைபெற்ற போது எடுக்கப்பட்ட விடியோவை தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளது ஏ ஜி எஸ் நிறுவனம்.