ரசிகர்களால் விஜய் 63 படத்திற்கு வந்த பிரச்சனை.! குழப்பத்தில் படக்குழு.!

0
368
Vijay-63

சர்கார் படத்தை தொடர்ந்து தற்போது விஜய், அட்லீ இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். தெறி, மெர்சல் போன்ற வெற்றி படங்களை தொடர்ந்து விஜய் மற்றும் அட்லீ மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ளனர். 

சமீபத்தில் இந்த படத்தின் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும், இந்த படத்தின் முதல் கட்ட பணிகளுக்கான சென்னையில் உள்ள பிரபல பின்னி மில்லில் தான் அமைக்கபட உள்ளதாக தகவல் வந்திருந்ததை ஏற்கனவே நமது வளைத்தளத்தில் கூறியிருந்தோம். 

விஜய் 63 படத்திற்காக வின்னி மில்லில் தற்போது செட் அமைக்கபட்டு படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் சென்ற வண்ணம் இருக்கின்றனர். மேலும், தினமும் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வீடியோகளும், புகைப்படங்களும் வெளியான வண்ணம் இருக்கிறது.

ரசிகர்களின் வருகையால் தினமும் படபிடிப்பு சற்று தாமதமாகி வருகிறது. மேலும், இந்த படத்தில் விஜய்யின் கெட் அப் தான் பெரிதாக பேசப்பட்டு வருகிறது. இதனால் விஜய்யின் கெட்டப் கசிந்து விடுமோ என்று படக்குழு குழப்பத்தில் இருக்கிறதாம். எனவே, படப்பிடிப்பு இனி இங்கு நடத்தலாமா? என்றே படக்குழு யோசித்து வருகின்றதாம்