விஜய் 64 ஷூட்டிங் அப்டேட். ஷூட்டிங்க நேரா போய் நீங்க தளபதியா பார்க்கலாம். எப்படினு கேக்குறீங்களா.

0
3871
vijay64
- Advertisement -

தென்னிந்திய தமிழ் சினிமா உலகத்தில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் இளைய தளபதி விஜய். அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘பிகில்’ படத்தை தொடர்ந்து தற்போது விஜய்யின் நடிப்பில் ” தளபதி 64″என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார். மேலும், அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார்.

-விளம்பரம்-
Image

விஜய் 64 படத்தை எக்ஸ்பி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், இதில் அனிருத் தான் இசை அமைப்பாளர் என்ற தகவல்கள் வெளிவந்தது.மேலும் இப்படத்தை சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார்கள் என்றும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு தற்காலிகமாக விஜய் 64 என்ற டைட்டில் வைத்துள்ளார்கள். விஜய் 64வது படம் அக்டோபர் மாதம் நான்கு முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ளது என படக்குழுவினர் மீடியாக்களில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தனர். மேலும் இந்த படம் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையுலகிற்கு வரும் என்று அப்படத்தின் இயக்குனர் லோகேஷ் தெரிவித்தார்.

இதையும் பாருங்க : குழந்தை பிறந்த பின்னர் எமி ஜாக்சன் எப்படி மாற்றிட்டார் பாருங்க. ஷாக்கான ரசிகர்கள்.

- Advertisement -

இந்த தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ தான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியே வந்தவுடன் ரசிகர்களிடையே அதிக வரவேற்பும், ஆர்ப்பாட்டத்தையும் ஏற்படுத்துகிறது. அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த வரிசையில் தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக ‘மக்கள் செல்வன் விஜய் சேதுபதி’ நடிக்க போகிறார் என்ற தெரிந்தவுடன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Image

தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் , விஜய் 64 படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் டெல்லியில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் படப்பிடிப்பு நடக்கப்போகிறது. குறிப்பாக லேடி இர்வின், இஸ்லாமியா, மிராண்டா ஹவுஸ், ஜமியா மில்லிமா, உள்ளிட்ட கல்லூரிகளிலும் நடைபெற இருக்கிறது. மேலும், நொய்டாவில் உள்ள சில சந்தைகளிலும் படப்பிடிப்பு நடக்கப்போவதாக தவல்கள் வந்துள்ளன. இதனால் டெல்லி நொய்டாவில் நீங்கள் இருந்தால் தளபதி விஜய்யை நீங்கள் நேரில் சென்று பார்க்க வாய்ப்பு இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement