மாற்றுத்திறனாளி பள்ளி வளாகத்தில் புகைபிடித்த விஜய் குழு . உறுதி செய்த பின் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

0
1612
vijay-64
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் வசூல் மன்னனாக பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். விஜய்யின் “தளபதி 64” படத்தின் படப்பிடிப்பில் படக்குழுவினர் சட்ட விரோத செயல்களை செய்து உள்ளார்கள் என்று புகார் வந்துள்ளது. தற்போது நடிகர் விஜய் நடிக்கும் “தளபதி 64” படம் குறித்து பல சர்ச்சைகள் சமூக வலைத்தளங்களில் வருகின்றன. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த பிகில் படம் திரையரங்குகளில் வேற லெவல்ல மாஸ் காட்டியது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடாத இந்த படத்திற்கு “தளபதி 64” என்றும் கூறி வருகிறார்கள். மேலும், இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்தார்கள். சமீபத்தில் தான் டெல்லியில் இந்த படத்தின் ஷூட்டிங் முடித்துவிட்டு சென்னை திரும்பினார்கள்.

-விளம்பரம்-
Image

- Advertisement -

அதன் பின் சென்னையை அடுத்த பூந்தமல்லியில் உள்ள பார்வைக் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகள் அரசுப்பள்ளியில் 3 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. படப்பிடிப்பு காரணமாக மாற்றுத்திறனாளி பள்ளியில் மாணவர்களை உள்ளே விடாமலும் , வெளியே விடாமலும் தடுத்து உள்ளார்கள். அதோடு பள்ளி வளாகத்தில் குப்பைகளைக் கொட்டுதல், எச்சி துப்புதல் என இன்னல் ஏற்படுத்தும் பல செயல்களை செய்து வந்து உள்ளார்கள். இதுதொடர்பாக அந்த பள்ளியின் ஆசிரியர் சரவணன் மணிகண்டன் அவர்கள் “தளபதி 64” படப்பிடிப்பு நடந்தபோது ஏற்பட்ட இன்னல்கள், இடர்பாடுகள் எல்லாவற்றையும் பேஸ்புக்கில் பதிவிட்டார். பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை எப்படி கண்ணியமாக நடத்த வேண்டும் என்ற அடிப்படை அறிவு இல்லாதவர்களாக உள்ளார்கள் என்றும் விமர்சித்தார்.

இது சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இந்த படத்தின் மீது புகார் ஒன்று எழுந்து உள்ளது. அதாவது தளபதி 64 படத்தின் படக்குழுவினர் மாற்றுத்திறனாளி குழந்தைகள் படிக்கும் பள்ளியில் புகைபிடித்தல், புகையிலை பொருட்கள் சம்பந்தமான அனைத்தும் உபயோகப்படுத்தி உள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் அவர்கள் ஆங்காங்கே அந்த குப்பைகளை கொட்டி பள்ளி வளாக்கத்தையே அசுத்தம் செய்து உள்ளார்கள் என்று பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதோடு எண்ணற்ற மாற்று திறனாளி குழந்தைகள் படிக்கும் பள்ளியில் ஒரு முன்னணி நடிகரின் படக்குழுவினர் இத்தகைய செயலில் ஈடுபட்டது சமுதாயத்தின் மீது அவர்களுடன் அக்கறையற்ற செயல் தெரிகிறது.

-விளம்பரம்-
Vijay

படத்தில் மட்டும் சமுதாயத்தின் மீது அக்கறை நலனுடன் காண்பித்தால் பத்தாது உண்மையான வாழ்க்கையிலும் நடந்துகொள்ள வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். மேலும், இவர்கள் புகையிலையை பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. மேலும், விஜய் திரைப்பட குழுவினர் மீது புகார் அளித்து உள்ளார்கள். பொது இடங்களில் புகை பிடிப்பதல் தடை செய்யப்பட்டுள்ளது என்று கோட்டா பிரிவு 4 கூறுகிறது. பிரிவு 6(ஆ)ன் படி எந்த ஒரு கல்வி நிறுவனத்தில் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதும், அதை உபோயகப்படுத்துவதும் சட்ட படி குற்றம் ஆகும்.

மேலும், பள்ளி வளாகத்திற்குள் படப்பிடிப்பிற்கு அனுமதிக்கக் கூடாது எனவும், வளாகத்தினுள் புகை பிடிப்பதற்கு அனுமதி இல்லை என்ற பதாகைகளை வைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள். இந்த சம்பவம் தளபதி 64 படக்குழுவினரிடம் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு விஜய்யின் தளபதி 64 படத்திற்கு பள்ளியில் அனுமதி அளித்த மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

Advertisement